செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டூனன்ட் பிறந்த தினம் ‘உலக செஞ்சிலுவை தினம்’-ஆண்டுதோறும் மே-8 -ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
செஞ்சிலுவை சங்கம்:
மனிதர்களின் நலனுக்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை (International Committee of the Red Cross (ICRC))ஹென்றி டூனன்ட் அமைத்தார். மனிதர்களின் ஆரோக்கியத்தையும், மனித உயிர்களையும் காக்கும் நோக்கில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. மருத்துவ உதவி, முதலுதவி உள்ளிட்டவை மூலம் மக்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும். இயற்கை பேரிடர் காலங்கள் போன்ற இக்கட்டான சூழல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த சங்கத்தின் மூலம் உதவியளிக்கப்படும்.
ஹென்றி டூனன்ட்
சுவிட்சர்லாந்து நாட்டில் பெரும் செல்வவளம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் ஹென்றி. இளம் வயதிலேயே வணிக ஆர்வம் கொண்டவராக இருந்தவர். வடக்கு ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய ஒரு முதலீட்டு திட்டத்தோடு அங்கே நீர்வள பயன்பாட்டு திட்டத்தோடு, அதற்கு அனுமதி பெறுவதற்காக பிரான்ஸ் மன்னரைச் சந்தித்தார். அப்போது, அங்கே போரில் வீரர்களும் மக்களும் துன்பப்படுவதை கண்டு மனம் வெதும்பினார். அப்போதுதான், அவருக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு அமைப்பை உருவாக்கினார்.
காயப்பட்டவர்களின் உயிரி காக்க, உதவி செய்ய உருவாக்கிய அமைப்புதான் செஞ்சிலுவை சங்கம். தன்னுடைய வருமானம் அனைத்தையும் அதில் முதலீடு செய்து சங்கத்தை வளர்த்தார். பல்வேறு நாடுகளும் செஞ்சிலுவை சங்கத்தோடு இணைந்தன. தொழில் நஷ்டம் ஏற்பட்ட போதும், செஞ்சிலுவை சங்கம் வெற்றிகரமாக மக்களுக்கு உதவியது.
முதல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது, அமைதிக்கான நோபல் பரிசு ஹென்றிக்கு வழங்கப்பட்டது. அதில் கிடைத்த பரிசு தொகையையும் செஞ்சிலுவை சங்கத்திடன் வழங்கினார். தனியறையில் கஷ்டத்தோடு வாழ்ந்து மறைந்தார் என வரலாறு சொல்கிறது. ஆனால், அவர் உருவாக்கிய செஞ்சிலுவை சங்கம் இன்றும் உலகம் முழுவதும் பலரது உயிர்களை பாதுகாத்து வருகிறது.
செஞ்சிலுவை நாளின் வரலாறு
1828 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி பிறந்த ஹென்றி டுனாண்டின் பிறந்தநாளை உலக செஞ்சிலுவைச் தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய இந்த ஹென்றி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.
1919 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் செஞ்சிலுவைச் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு நிறுவப்பட்டது. 1984 ஆம் ஆண்டு இந்த நாள் அதிகாரப்பூர்வமாக உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என அறிவிக்கப்பட்டது. மனிதர்களுக்கு சேவை செய்வதே இந்த சங்கத்தின் முதன்மையான நோக்கமாகும். இந்தாண்டிற்கான கருப்பொருள் ‘To highlight the universal, human, and diverse aspects of the Red Cross Movement’ என்பதாகும்.