உடல் உறுப்புகளிலேயே கல்லீரலின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் நச்சுக்கள்,  கழிவுகள் ஆகிவயற்றை நீக்குவது; உணவு செரிமானத்திற்கு பிறகு உறிஞ்சிக் கொண்ட சத்துகளை உடல் முழுவதும் ரத்தத்தில் கலக்கும் பணி உள்ளிட்டவற்றை அயராது செய்து வருவதும் கல்லீரல் தான். உடலின் பிற உறுப்புகளை விட, அதிகளவிலான வேலைகளைச் செய்வதும் கல்லீரல் என்று மருத்துவ உலகம் தெரிவிக்கிறது.


தற்போது வரை, கல்லீரலின் மொத்த பயன்களாக 500 பயன்கள் பட்டியலிடப்படுகின்றன. நாம் உண்பது உணவு, மது, விஷம் என எதுவாக இருந்தாலும் அதன் மீது செயலாற்றுவது கல்லீரலின் முதன்மைப் பணி. எனவே நாம் உண்ணும் நச்சுப் பொருள்கள் அனைத்துமே கல்லீரலால் உறிஞ்சிக் கொள்ளப்படுகின்றன. மேலும் ரத்தத்தில் ஏற்படும் தொற்றுகளும் கல்லீரலைப் பாதிக்கின்றன. 


ஆரோக்கியமான கல்லீரலுக்கு எதெல்லாம் நல்லது?


பச்சை காய்கறிகள், கீரை வகைகள், ப்ரோக்கோலி ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். 


நல்ல கொழுப்புள்ள உணவுகள் உள்ளிட்டவற்றை டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். 


வால்நட்,அவகேடோ,ஆலிவ் எண்ணெய் ஆகியவைகள் கல்லீரலுக்கு நல்லது. 


போதிய அளவு தண்ணீர் அருந்துவது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. 


நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாக, உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதில் தண்ணீர் பெரும் உதவி புரிகிறது. தண்ணீர் ஒரு சிறந்த ’detoxicating agent'.
 
டயட்டில் பழங்கள் அதிகம் இருக்கட்டும்.


தினமும் உடற்பயிற்சி செய்வது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.


கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தீங்கு எது?


கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மருத்துவர்கள் கூறும் பொன்விதிகளாக இதை எடுத்துக்கொள்ளலாம்.


பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதில் க்ளைக்கமிக் இண்டெக்ஸ் அதிகமாக இருப்பதால் கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்வதற்கு வழிவகுக்கும். 


அதிக சர்க்கரை உள்ள உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. 


மது அருந்துவது, புகைப்பிடிப்பது ஆகியவற்றிற்கு பெரிய ‘நோ’ சொல்ல வேண்டும். 


கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க ’ரெட் மீட்’ சாப்பிடுதை தவிர்க்க வேண்டும்.


அதிக சர்க்கரை உள்ள குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.


கல்லீரல் குறித்த பாதிப்புகளால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கும் போது, தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.. கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் என்ன விளைவுகள் தோன்றும்?







  • வயிற்றின் வலது மேல் பகுதியில் வலி

  • வயிற்றில் வீக்கம்

  • தலைச்சுற்றல்

  • உடல்நலிவு

  • குழப்பம்

  • தூக்கம் அதிகமாக வருவது





கல்லீரலில் கொழுப்பு சேர்வதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து கல்லீரலின் இயக்கத்தையே நிறுத்தக்கூடியது. அதிகளவில் மது அருந்துவது, உடல் பருமன் கொண்டோர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆகியோருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 


கல்லீரல் நோய் என்பதன் வளர்ச்சி மிகவும் மெதுவாக நடைபெறும் ஒன்று என்பதால் வாழ்க்கை முறைகளை ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலமாக மாற்றுவது மட்டுமே கல்லீரல் பாதிப்புகள் பெருகாமல் தவிர்க்கும். ஆரோக்கியமான காலை உணவை ஊன்பது, உப்பு, கொழுப்பு உட்கொள்வதைக் குறைத்துக் கொள்வது, அதிகளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, அதிகளவில் நீர்ச்சத்து எடுத்துக் கொள்வது, அதிக மது அருந்தாமல் இருப்பது, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது ஆகியவற்றின் மூலம் கல்லீரல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.