சரும பராமரிப்பு என்பது கோடை, குளிர் மழை என எல்லா பருவங்களிலும் பிரத்யேகமாக செய்ய வேண்டிய ஒன்றாக இருக்கும். சருமத்தை பாதுகாப்பதில் நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சரும பராமரிப்பின் முக்கியத்துவம், ஆரோக்கியமான சருமத்தை பெற பின்பற்ற வேண்டியவைகள் என்ன உள்ளிட்டவை குறித்து சருமநல நிபுணர்களின் கருத்துக்களை காணலாம். 


நாம் உணவு முறைகள் சரும செல்களின் ஆரோக்கியத்தில் பங்காற்றுகிறது. அதிக எண்ணெய் கொண்ட உணவு, துரித உணவுகள், மசாலா அதிகமாக உணவுகள், சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருப்பது, போதுமான அளவு தூக்கம் இல்லாதது உள்ளிட்டவை சருமம் க்ளியராக இல்லாமல் போவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.


சீரகம், குங்கும பூ, பெருஞ்சீரகம் உள்ளிட்ட இந்திய மசாலா வகைகள் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்திற்கு தேவையான சத்துக்களை தருகிறது. அதில், கொத்தமல்லி விதை, தனியா என்று அழைக்கப்படும் மசாலா பொருள் சரும பராமரிப்பிற்கு உதவுவது குறித்து காணலாம். 


இயற்கையாகவே சருமம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்றால் தனியா அது உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



கொத்தமல்லி விதையில் வைட்டமின் கே, சி மற்றும் ஏ ஆகியவற்றுடன் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது வளர்சிதை மாற்றத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.  இதற்கு உடலிலுள்ள கெட்ட கொழுப்பை எரிக்கும் திறன் இருக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. உடலிலுள்ள நச்சுக்கள் வெளியெற உதவுகிறது. இது ஆன்டி-மைக்ரோபயல், ஆன்டி-ஃபங்கல் பண்புகளை கொண்டுள்ளது. அதனால் சரும செல்களை பராமரிக்க உதவுகிறது. 


இது இயற்கையான டீடாக்ஸிஃபையர் என்றழைக்கப்படுகிறது. உடலிலுள்ள நச்சுக்களை அகற்றி சரும உள் அமைப்புகளில் உள்ள இறந்த செல்களை நீக்கும் பண்பை கொண்டுள்ளது. சருமத்தில் ஏற்படும் வறட்சி, எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு கொத்தமல்லி தண்ணீர் உதவியாக இருக்கும். 


வெயில் தாக்கம் அதிகம் இருக்கும் நேரங்களில் சருமத்தில் ஏற்படும் எரிச்சல், சன் பர்ன் உள்ளிட்டவற்றை சரிசெய்வதிலும் கொத்தமல்லி விதை சிறந்தது என்று சொல்லப்படுகிறது. 


இது சருமத்தின் நிறத்தை சீராக வைக்கவும், கரும்புள்ளிகள் உள்ளிட்டவற்றை நீக்கவும் உதவுகிறது. 






கொத்தமல்லி தண்ணீர் தயாரிப்பதை எப்படி?


இரண்டு டீஸ்பூன் கொத்தமல்லி விதையை தண்ணீரில் இரவு முழுக்க ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்ததும் அதை நன்றாக கொதிக்க வைத்து வடிக்கட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம். இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 


பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.