Holi 2025: ஹோலி கொண்டாட்டம் எப்போது? மார்ச் - 13ம் தேதியா? 14ம் தேதியா?
Holi 2025:ஹோலி பண்டிகை எப்போது கொண்டாடப்படும் என்பது பற்றிய தேதி விவரத்தை இங்கே காணலாம்.

வண்ணங்களின் பண்டிகை என்றழைகக்ப்படும் ‘ஹோலி பண்டிகை’ நாடு முழுவதும் கொண்டப்படும் பிரசித்திபெற்ற பண்டிகைகளுள் ஒன்று. மகிழ்ச்சியும் குதுகலமும் நிறைந்த பண்டியை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்து காத்திருப்பதும் உண்டு. அப்படி இருக்கையில், ஹோலி பண்டிகை எப்போது கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
ஹோலி பண்டிகை:
Just In




ஹோலிப் பண்டிகை வட இந்தியாவில் அதிகம் கொண்டாடப்படும் ஒன்றாக தொடங்கியிருந்தாலும், மற்ற மாநிலங்களிலும் பல்வேறு கதைகளுடன் கோலாகலமாக கொண்டாடப்படும் வழக்கம் அதிகரித்துவிட்டு. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல்வெறு பெயர்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. லத்மார் ஹோலி, உத்திரபிரதேசம், பகுவா ஹோலி-பீகார்,உக்ளி,கேரளா, ஷிக்மோ,கோவா ராயல் ஹோலி ஆகிய பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
ஒரு இடத்தின் தட்பவெப்ப நிலை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு சில பண்டிகைகள் கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது. உணவு சங்கிலிக்கு ஆதாரமாக இருக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தியாவின் பல மாநிலங்களில் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. அதைப்போலவே, இளவேனிற்காலத்தை வரவேற்கும் விழாவாக ஹோலி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் உள்ள மக்கள் பனிக்காலம் முடிந்து வேனிற்காலத்தை வரவேற்கும் விதமாக வண்ணங்களை தூவி, மகிழ்ச்சியுடன் ஹோலி கொண்டாடுகின்றனர். ஒவ்வொன்றும் தனி வண்ணம் என்றாலும், எல்லா வண்ணங்களின் கலவை நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஹோலி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்னமே மக்கள் வண்ண பொடிகளை தயாரிப்பதும், வாங்குவதும் என இருப்பார்கள்.
ஹோலி, Holika Dahan, Rangwali Holi, மூன்றும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறதா? வெவ்வேறு நாட்களிலா என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம்.
ஹோலி 2025 எப்போது கொண்டாடப்படுகிறது?
ஹோலி இரண்டு நாட்களில் கொண்டாடப்படுகிறது. 'Chhoti Holi', 'Rang Holi' என்று இரண்டு நாட்களில் கொண்டாடப்படுகிறது. 'Chhoti Holi' Holika Dahan இரண்டும் எப்போது கொண்டாடப்படும் என்பதில் குழப்பம் எழலாம்.
- ஹோலி பண்டிகை - மார்ச், 14,2025
- ஹோலிகா தஹான் - மார்ச், 13 - 2025
- பூர்ணிமா திதி தொடக்கம் - 13.03.2025 காலை 10.35
- பூர்ணிமா திதி முடிவு - 14.03.2025 நண்பகல் 12.23
ஹோலிகா தஹான்
ஹோலிகா தஹான் மட்டுமே நேரம் பார்த்து கொண்டாடப்படும். மார்ச், 13 -ம் தேதி ஹோலிகா தஹான் கொண்டாடப்படும். வண்ண நிறங்களின் கொண்டாட்டம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் இரவு, பழைய எண்ணங்கள், தீயவைகளை விட்டுவிட்டு புதியதை நோக்கி நகரும் முறையாக கருதப்படுகிறது. அப்போது, மரக்கட்டைகள் வைத்து நெருப்பு உருவாக்கி அதை வழிபடுவர். இதற்கு புராண கதைகளில் கூறப்படும் கதை.. நாராயணனின் தீவிர பக்தரான பிரகலாதனைக் கொல்ல ஹிரண்யன் முயற்சி செய்தார். ஹோலிகாவை கட்டியணைப்பவர் யாராக இருந்தாலும் தீயில் அழிந்துபோவார்கள் என்ற நிலையில் ஹோலிகா, குழந்தை பிரகலாதனை கட்டியணைத்துப் பொசுக்கத் தீர்மானித்தாள், அப்போது, நாராயணன் பிரகலாதனைக் காப்பாற்றிவிடுவார்.
மறுநாள், தீமைகள் நீங்கி, வண்ணங்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடுவர்.