கோடைக்காலத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும், நீர்ச்சத்து குறைவதைத் தடுக்கவும் நாம் பழங்களை நாடுவோம். அந்த வகையில் தர்பூசணி அல்லது முலாம்பழம் இந்த இரண்டில் எது சிறந்தது என்பது பற்றிக் காணலாம். 

Continues below advertisement

கோடைகாலம் வந்தாலே வெயில் வாட்டி எடுக்க தொடங்கி விடும். உடலில் எனர்ஜி லெவல் குறையும் நிலையில் நீரிழப்பை தடுக்க தண்ணீர், ஜூஸ் என நாம் குடிப்பது வழக்கம். ஃப்ரெஷ் ஜூஸ் முதல் கார்ப்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் வரை நாம் எடுத்துக் கொள்கிறோம். அந்த வகையில் கோடைக்காலத்தில் பெரும்பாலான மக்கள் தர்பூசணியும் முலாம்பழமும் சாப்பிடுகிறார்கள். இவை இரண்டும் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனைகளை சரி செய்கிறது. இதனால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. 

தர்பூசணியில் கிடைக்கும் நன்மைகள் 

வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ள தர்பூசணியில்  நார்ச்சத்து அதிகளவிலும் 90 சதவீதம் நீரும் உள்ளது. கோடையில் இதனை எடுத்துக் கொள்வது வெயில் சூட்டால் ஏற்படும் கண் தொடர்பான பாதிப்புகளை சரி செய்கிறது. அதுமட்டுமல்லாமல் செரிமானத்தை சரி செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதனால் உடல் எடையும் அதிகரிக்காமல் நிர்வகிக்கப்படுகிறது. கோடைக்காலத்தில் இதைச் சாப்பிடுவது உடலுக்கு நீர்ச்சத்தை அளிக்கும். இது உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. 

Continues below advertisement

முலாம் பழத்தில் கிடைக்கும் நன்மைகள்

அதேசமயம் முலாம் பழத்தில் 92 சதவிகிதம் நீர் உள்ளது. மேலும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி இதில் நிறைந்துள்ளது. லைக்கோபீன் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் இதில் அமைந்துள்ளது. கோடைக்காலத்தில் இதைச் சாப்பிடுவது உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக் கொள்ள விரும்பினால் கோடைக்காலத்தில் முலாம் பழத்தை விட  தர்பூசணி சிறந்த தேர்வாகும். இது உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். எனினும் கோடைக்காலத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க இது உதவுகிறது. இவை இரண்டுமே சிறந்தவையாகும். 

தர்பூசணி மற்றும் முலாம்பழம் இரண்டுமே உடல் நலத்திற்கு நல்லதாக இருந்தாலும் ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இந்த பழங்களை நீரிழிவு நோயாளிகள் குறைவாகச் சாப்பிட வேண்டும். தர்பூசணியாக இருந்தாலும் சரி, முலாம்பழமாக இருந்தாலும் சரி, வெட்டிய உடனேயே சாப்பிடுவது நல்லது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் 24 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இதனை ஜூஸாகவும் அருந்தலாம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பானங்களுக்குப் பதிலாக இதுபோன்ற பழங்களை சாப்பிடுவது நன்மை பயக்கும். உடல் நல பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின் இந்த பழங்கள் எடுப்பதை முடிவு செய்வது நல்லது.