எடை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் எதிர்பார்ப்பது எல்லாம், பிடித்ததை எல்லாம் சாப்பிட வேண்டும் எடையும் குறைய வேண்டும். இன்னும் சிலர் பிடித்ததை சாப்பிட வேண்டும் எந்த உடற்பயிற்சியும் செய்ய முடியாது என்பார்கள், சிலர் டயட் இருந்து விடுகிறேன் ஆனால் உடற்பயிற்சி செய்ய முடியாது என்பார்கள். இது போன்று உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒவ்வொரு விதமான பீலிங் இருக்கும்.
பிடித்ததை எல்லாம் சாப்பிட்டு எப்படி எடை குறையும் ?
உணவு ருசி என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலருக்கு காரமாக நம்ம ஊரு மசாலா சேர்த்த பிரியாணி, பரோட்டா, சைவ அசைவ உணவுகள் பிடிக்கும். சிலருக்கு வெளிநாட்டு உணவுகள் பிட்சா , பர்கர் வகைகள் பிடிக்கும். இது போன்று ஒவ்வொரு வகை ருசி இருக்கும். சில உணவு பிரியர்களுக்கு அணைத்து வகையான உணவுகளையும் சாப்பிடும் பழக்கம் இருக்கும். உடல் எடை அதிகமாக இருக்கிறது எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டி வருமே என நினைக்கலாம். ஆனால் அப்படி செய்யவேண்டாம். நீங்கள் எடுத்து கொள்ளும் உணவையே அளவோடு எடுத்து கொண்டு உடல் எடையை குறைக்கலாம்
எப்படி இதை பின்பற்றுவது ?
பரோட்டா பிரியராக இருந்தால் மாதத்திற்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒரு முறை நீங்கள் பரோட்டாவை சுவைத்து கொண்டு மற்ற நாட்களில், நீங்கள் எப்போதும் எடுத்து கொள்ளும் உணவு அல்லது டயட் எடுத்து கொள்ளலாம். டயட் இருக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு வாரத்திற்கு ஒரு நாள் அணைத்து உணவுகளையும் சாப்பிட்டு கொள்ள ஒரு நாளை தனியாக ஒதுக்கி கொள்ளுங்கள். அந்த நாளில் உங்களுக்கு பிடித்த அனைத்தையும் சாப்பிட்டு மற்ற நாட்களில் டயட் எடுத்து கொள்ளலாம்.
எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும் ?
நீங்க பிட்சா பிரியராக இருந்தால் ஒரு முழு பிட்சா வையும் முழுங்காமல், ஒரு ஸ்லைஸ் மட்டும் சாப்பிடலாம். பரோட்டா பிரியராக இருந்தால் 1 அல்லது 2 மட்டும் எடுத்து கொள்ளலாம். இந்த அளவில் மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். அளவோட சாப்பிடலாம். டயட் உடன் சேர்த்தும் எடுத்து கொள்ளலாம்.
என்ன உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் ?
கார்போஹைட்ரெட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அதாவது, அரிசி, பருப்பு, காய்கள், பழங்கள் ஆகியவற்றை அளவோடு எடுத்து கொள்ள வேண்டும். உணவு ஆலோசகரின் பரிந்துரையின் பேரில் அவரவர் உடலுக்கு ஏற்றமாதிரி உணவுகளை எடுத்து கொள்ளலாம்..
என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் ?
சர்க்கரை, சோடா, பதப்படுத்த பட்ட உணவுகள் மைதா, எண்ணையில் பொறித்த வறுத்த உணவுகள், ஐஸ் கிரீம், சாக்லேட், இனிப்புகள் , ஆகியவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அத்தியாவசியம் இல்லாத உணவுகள் இவை.