பொதுவாக வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கு வெளியே இருந்து உணவுப் பொருட்கள் வாங்கி வருவதே பிடிக்காது. அவர்களுக்கு வீட்டில் சமைத்த உணவின் சுவைதான் பிடித்தமானது. வெளியே இருந்து வரும் உணவுப் பொருட்கள் சுத்தமாகவோ அல்லது சுவையாகவோ இருப்பதில்லை என்பது அவர்களுடைய நம்பிக்கை. அதனால் அப்படி ஏதேனும் உணவு வாங்கிக் கொண்டு வந்தால் வீடே ரெண்டுபட்டுவிடும் அல்லது அவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாகத்தான் சாப்பிடவேண்டும். ஆனால் விநோதமாக அண்மையில் ஒரு பாட்டி பெரி பெரி ஃப்ரைஸ்க்கு ரசிகையான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஜய் பாரிக் என்பவர் அண்மையில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.


அந்த வீடியோவில் அவரது பாட்டி ஒரு பெரி பெரி ஃப்ரையை அழகாக பாக்கெட்டில் ரெடி செய்து சுவைத்து சாப்பிடுகிறார். இந்த வீடியோ இதுவரை ஆறு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.






பாட்டி பெரி பெரி ஃப்ரை ரசித்து ருசித்து சாப்பிடும் வைரல் வீடியோ


வீடியோவில் தனது பாட்டி பற்றி குறிப்பிட்டுள்ள பாரிக், தனது பாட்டி மிகவும் தூய்மை பாராட்டக்கூடிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் ஒருநாள் மார்க்கெட்டுக்குச் சென்று திரும்புகையில் மெக் டொனால்ஸ்ட்ஸில் பெரி பெரி ஃப்ரை வாங்கிச் சென்றதாகவும் முதலில் அதை அவர் சாப்பிட மறுத்ததாகவும் கூறுகிறார். பிறகு 15 முதல் 20 நிமிடம் வரை அவரை எப்படியோ மனம் மாற்றி பெரி பெரி ஃப்ரை சாப்பிட வைத்துள்ளார். சாப்பிட்டதும் அவருக்குப் பிடித்துப் போகவே அடுத்த முறை மார்க்கெட் செல்லும்போதெல்லாம் அதனை வாங்கிவரச் சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்ல தானே பெரி பெரி ப்ரையை தயார் செய்து சாப்பிடுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.