உணர்வற்ற மனுஷங்களப் பார்த்து மிருகமா நீன்னு திட்டுறது உண்டு. ஆனால் உண்மையில் மனுஷங்களைப் போலவே உணர்வுப்பூர்வமானவை தான் விலங்குகளும்.


சமீபத்தில் கூட பக்ரீதுக்கு விற்கப்பட சந்தைக்கு அழைத்துவரப்பட்ட ஆடு நிலைமையை அறிந்து உரிமையாளரின் தோளில் விழுந்து கதறி அழுத காட்சி காண்போரை நெகிழ வைத்தது.






அதுபோலத்தான் தற்போது இன்னொரு காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில் இருக்கும் காட்சிகள் இவைதான். ஒரு சிம்பன்சி சாவகாசமாக அமர்ந்து ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அப்போது அருகில் ஒரு ஆமை இருக்கிறது. இந்த சிம்பன்சி தான் ஒரு கடி ஆப்பிளை கடிக்கிறது. அப்புறம் ஆமைக்கு ஒரு கடி கொடுக்கிறது. அந்த சீனில் இன்னொரு சிம்பன்சியும் இருக்கிறது. அந்த சிம்பன்சி நடப்பதை ரசித்துக் கொண்டிருக்கிறது.






இந்த வீடியோ இந்த செய்தி பதிவிடப்பட்ட நேரத்திலேயே 3.4 லட்சம் பேரால் விரும்பப்பட்டிருந்தது. இதனை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்விட்டராட்டிகள் ரீ ட்வீட் செய்திருந்தனர்.


இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல நெகிழ்ச்சியான பின்னூட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.


இது போல அண்மையில் இணையத்தில் வைரலான இன்னொரு சிம்பன்சி வீடியோவில், கானகத்தில் காய்த்துக்கு குலுங்கும் ஆரஞ்சுப் பழங்களை ஒரு குரங்கு பறிக்கிறது. கைகள் நிறைய பழங்கள் சிலவற்றை வாயில் அடைத்துக் கொள்கிறது. அப்படியும் பத்தாமல் கால்களிலும் சிலவற்றை இடுக்கிக் கொண்டு நடக்க முடியாமல் நடக்கிறது.






குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பதால் மனிதனுக்கு இந்தப் பேராசையும் குரங்கிடம் இருந்து தான் வந்திருக்குமோ என்று சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.


எப்போதெல்லாம் மனம் இறுக்கமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற பிராணிகளின் வீடியோக்களைப் பார்க்கலாம். ஃபன்னி அனிமல்ஸ் என்ற யூடியூப் சேனலே கூட இதற்காக இருக்கிறது. வீட்டில் வளர்க்கும் நாய், பூனை தொடங்கி காட்டு யானை, கருங்குரங்கு வரை அத்தனை விலங்குகளின் சேட்டைகளையும் கண்டு ரசிக்கலாம்.