விநாயகர் சதுர்த்தி வந்தாச்சு...கொண்டாட்டம்தான். மோதகப் பிரியன், பிள்ளையார், விநாயகர் என அழைக்கப்படுபவருக்கு கொழுக்கட்டையும் சிறப்பு வழிபாடு செய்து கொண்டாடப்படும் நாள் பிள்ளையார் சதுர்த்தி. 


இது வட மாநிலங்களில் பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அங்கு பத்து நாட்களும் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடைபெறும்.  தமிழ்நாட்டில் சதுர்த்தி தினம் அன்று விநாயகர் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெறுகிறது. வீடுகள், கோயில்கள், சில பகுதிகள் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து இந்த நாள் கொண்டாடப்படும். 


விநாயகர் சதூர்த்தி


எண்ணிய செயல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் இருக்க வணங்கப்படுபவர் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான் என்பது பலரின் நம்பிக்கையாக இருக்கிறது. சதுர்த்தி தினத்தில் சிறப்பு வழிபாடு செய்து அவருக்கு பிடித்ததாக சொல்லப்படும் உணவுகள், கொழுக்கட்டை, பழங்கள் உள்ளிட்டவற்றை படைத்து செய்து வழிபாடு நடத்தப்படும். கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 


எப்போது பூஜை செய்ய வேண்டும்?


ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி  கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நாளன்று (07.08.2024) மதியம் 1 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும். ( காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை ராகு காலமும், மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை எமகண்டம்- இந்த நேரத்தில் வழிபாடு செய்ய கூடாது என்று சொல்லப்படுகிறது.)


வாழ்த்து சொல்லுங்க:



  • உங்கள் வாழ்வில் வரும் தடைகளை எல்லாம் நீக்கி எல்லாவற்றையும் அருள விநாயகர் எப்போதும் இருப்பார். இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

  • இந்த நாள் மகிழ்ச்சியையும் வளத்தையும் உங்களுக்கு அருளட்டும். இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

  • வாழ்வில் எல்லா ஆனந்தமும் கிடைக்கடும். இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

  • உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் விநாயகர் பெருமானின் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்கும் என்பதில் நம்பிக்கையுடன் இருங்கள். வாழ்க வளமுடன். இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

  • உங்கள் கனவுகள் நிறைவேறட்டும். இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

  • வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் நிலைத்திருக்க வாழ்த்துகள். இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

  • வாழ்க்கையில் வரும் சிக்கல்களை சமாளிக்கும் திறனை விநாயகர் உங்களுக்கு வழங்குவார். இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

  • செல்வம் பெருக வாழ்த்துகள். இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

  • இந்த விநாயகர் சதுர்த்தி நாள் உங்களுக்கு பல நன்மைகளின் தொடக்கமாக அமையட்டும். 
    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

  • விநாயகரிடம் சரணடைந்துவிடுங்கள். உங்கள் வாழ்வின் ஒளியாக அவர் வழிகாட்டுவார்.இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

  • முழு முதற் கடவுளிடம் பிரார்த்தனை செய்தால் வாழ்வு வளமுடன் இருக்கும். நன்றி தெரிவித்து வணங்கி மகிழ்வோம்.இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

  • வெற்றி விநாயகர் உங்கள் வாழ்வின் வெற்றிக்கு அருள்வாராக. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

  • எதிர்வரும் எல்லா இடர்களில் இருந்தும் நம்மை கணேசன் காப்பாற்றுவார் என்று நம்பிக்கையுடன் வழிபடுங்கள்.இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

  • உங்கள் வாழ்வில் நிம்மதி பெருகட்டும்.இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

  • ஆரோக்கியமாக வாழ்கையை பெற பிரார்த்தனை செய்கிறோம்.இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

  • இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்! விநாயகர் அருளோடு மகிழ்ச்சியுடன் வழிபடுவோம்.