காதலின் காலம் வந்துவிட்டது, மக்கள் காதல் கண்களில் கொப்பளிக்க உற்சாகமாக இருக்கிறார்கள்.மூன்றாம் நூற்றாண்டில் ரோமில் வாழ்ந்த கத்தோலிக்க மதகுருவான செயிண்ட் வாலண்டைனைக் கொண்டாடும் வகையில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.  பிப்ரவரி 14ம் தேதி உலகளாவிய காதலர் தினக் கொண்டாட்டங்களின் போது டேட்டிங் செல்வது, பிரியமானவர்களுக்கு முத்தங்கள், கிப்ட்கள் கொடுத்து அன்பைப் பரிமாறுவது அவர்களின் இனிப்பான கதைகளைக் கேட்பது எனக் காதலர்களுடன் காதலர் தினத்தைக் கொண்டாடுகின்றனர். ஆனால் வேலண்டைன்ஸ் டே மட்டுமே காதலர் தினமல்ல. அதற்கு ஒருவாரம் முன்பிருந்தே அதற்கான கொண்டாட்டம் தொடங்கிவிடுகிறது, ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே மற்றும் கிஸ் டே போன்றவற்றையும் கொண்டாடுகிறார்கள். இந்த தினங்களுக்கு எனத் தனிச்சிறப்பு உண்டு.உங்கள் வாழ்க்கையிலும் அந்த ஸ்பெஷல் சம் ஒன் இருந்தால் அவர்களிடம் உங்கள் காதலைத் தெரிவிக்க அன்பை அள்ளிக் கொடுக்க இந்த தினங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம்.



பிப்ரவரி 7 - ரோஸ் டே (Rose Day)


காதலர் தின கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு ரோஸ் டேவுடன் தொடங்கும். மக்கள் ஒருவருக்கொருவர் ரோஜாக்களை கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். ரோஜாக்களின் நிறமும் அவற்றின் பின்னால் உள்ள உணர்வுகளை வரையறுக்கிறது. யாராவது தங்கள் அன்புக்குரியவருக்கு சிவப்பு ரோஜாவைப் பரிசாகக் கொடுத்தால், அது காதலைக் குறிக்கிறது. மஞ்சள் ரோஜா நட்பைக் குறிக்கிறது.


பிப்ரவரி 8 - ப்ரோபோஸ் டே (Propose Day)


அடுத்த நாள் ப்ரோபோஸ் டேவாகக் கொண்டாடப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போல, இந்த நாளில், மக்கள் தங்கள் உணர்வுகளை தங்கள் பார்டனரிடம் அன்று வெளிப்படுத்துகிறார்கள். இன்றைய தேதியில் நிறைய பேர் தங்கள் காதலர் முன்பு மண்டியிட்டு கையில் மோதிரம் ஏந்தியிருப்பதைக் காணலாம்.


பிப்ரவரி 9 - சாக்லேட் தினம் (Chocolate Day)


மூன்றாவது நாள் சாக்லேட் தினம். இந்த நாளில், மக்கள் தங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து கசப்புகளையும் மறந்துவிட்டு, இனிப்பு மிக்க சுவையான சாக்லேட்டுகளை பரிமாறிக்கொள்வார்கள்.


பிப்ரவரி 10 - டெட்டி டே (Teddy Day)


நான்காவது நாளில், காதலில் உள்ளவர்கள் தங்கள் பார்ட்னர்களுக்கு ஒரு டெட்டி பியரை பரிசாக வழங்குகிறார்கள். அந்த நபரின் மீதான உங்கள் அன்பை வெளிப்படுத்தவும் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யவும் உங்கள் காதலிக்கு நீங்கள் ஒரு சாஃப்ட் டாய் பொம்மையை வழங்குவதே யோசனை.


பிப்ரவரி 11 - ப்ராமிஸ் டே (Promise Day)


பிப்ரவரி 11 அன்று, தம்பதிகள் ப்ராமிஸ் டேவைக் கொண்டாடுகிறார்கள். 



பிப்ரவரி 12 - ஹக் டே (Hug Day)


ஆறாவது நாள் ஹக்டே. ஒருவரைக் கட்டிப்பிடிப்பதில் அவரின் உடலில் உள்ள செரட்டோனின் உள்ளிட்ட ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்க தொடங்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. நம் பார்ட்னருக்கு மகிழ்ச்சியைத் தராமல் வேறு யாருக்குத் தரப்போகிறோம்.


பிப்ரவரி 13 - கிஸ் டே (Kiss Day)


காதலர் தினத்திற்கு முன்னதாக பிப்ரவரி 13 அன்று முத்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்கள் பார்ட்னர்களை முத்தமிடுகிறார்கள். காதலை வெளிப்படுத்த க்ளாஸிக்கான முத்தத்தை விட வேறு எது சிறந்த வழி? 


பிப்ரவரி 14 - காதலர் தினம் (Valentine's Day)


இறுதியாக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று காதல் தினம் கொண்டாடப்படுகிறது. பார்ட்னர்களுடன் இந்த நாளைக் கொண்டாடுவதன் மூலம் தங்களது வாழ்வின் மறக்கமுடியாத தினத்தை இவர்கள் அன்று உருவாக்குகிறார்கள்.