Power Of Moringa:உடல் எடையைக் குறைக்க முருங்கைக்கீரை உதவுமா? நிபுணர்களின் அறிவுரை!

Power Of Moringa: உடல் எடையை குறைக்க முருங்கைக்கீரை எப்படி சாப்பிடலாம் என்பது குறித்து இங்கே காணலாம்.

Continues below advertisement

உடல் எடையை குறைக்க வேண்டும் என திட்டமிடுபவர்களுக்கு எந்த உணவை டயட்டில் சேர்ப்பது, தவிர்ப்பது என்பதை தீர்மானிப்பது சற்று சவாலானதுதான். ஏனெனில், உடல் எடையை குறைக்கும் பயணம் என்பது ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது என்பதை ஊட்டச்சத்து நிபுணர்கள் தெளிப்படுத்துகிறார்கள்.

Continues below advertisement

உடல் எடை குறைப்பு பயணம்:

உடல் எடை அதிகமாக இருந்தால், ஆரோக்கியத்திற்காக மட்டுமே உடல் எடையைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டும். தொடர்ந்து செய்யும் சின்ன சின்ன மாற்றங்கள் மூலம் உடல் எடை குறைக்கும் பயணத்தை எளிதாக மாற்றலாம். கடுமையான டயட், சீரான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்பது பரிந்துரைக்கப்பட்டுகிறது. ஆனால், உடல் எடை குறைப்பது என்பது ஒவ்வொருவரின் உடல்நிலை உள்ளிட்டவைகளுக்கு ஏற்ப  வேறுபடக்கூடியது.  ஒருவருக்கு பயன்தரும் ஃபார்முலா  மற்றவருக்கு பலனளிக்க வேண்டும் என்றில்லை. உங்கள் உடலின் நிலையை அறிந்துகொள்வது, நிபுணர்களை அணுகி பரிந்துரைகளை பெறுவது நல்லது என்று கூறப்படுகிறது.
 
பிடித்த உணவுகளை தவிர்த்து கஷ்டப்பட்டு சிலவற்றை சாப்பிட முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நெய், வெண்ணெய் போன்ற உணவுகளில் அதிக கொழுப்பு இருக்கிறது என்று சிலர் டயட்டில் அதை தவிர்த்துவிடுவர். ஆனால், இவற்றில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. அளவோடு சாப்பிடலாம். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு, துரித உணவுகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், சர்க்கரை ஆகிய ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை தவிர்க்கவும். 

உடல் எடை குறைக்கும் பயணத்தில் முருங்கைக்கீரை உதவுமா?

முருங்கைகீரை உணவில் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். National Institutes of Health அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுதன் படி, முருங்கைக்கீரை நார்ச்சத்து நிறைந்தது. 12% வரை ’dietary fibre’ நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் உணவில் அதிகம் நார்ச்சத்து இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இது உங்களுக்கு அடிக்கடி பசி உணர்வை ஏற்படுத்தாது. செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளையும் அதிகரிக்கும். கூடுதலாக, முருங்கைக்கீரை வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும், கலோரியை எரிக்க உதவும் என்பதை ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர். 

முருங்கைக்கீரை:

பாலை விட கால்சியத்தின் அளவு முருங்கைக்கீரையில் அதிகம்; கேரட்டை விட வைட்டமின் ஏ பத்து மடங்கு அதிகமாக இருக்கிறது.  முருங்கைக்கீரை சாப்பிட்டால்  ஊட்டச்சத்து கிடைக்கும். இது வளர்சிதை மாற்றத்தை சீராக இயங்க உதவும். இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துதல், முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது,  கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் திறன் கொண்டது. வாரத்தில் மூன்றுமுறையாவது உணவில் முருங்கைக்கீரை சேர்ப்பது நல்லது. 

முருங்கைக்கீரை சூப், கூட்டு, பராத்தா, பொடி உள்ளிட்டவற்றை செய்து சாப்பிடலாம். தோசையில் முருங்கைக்கீரை தோசை செய்யலாம். உணவில் எந்த அளவுக்கு முருங்கைக்கீரை சேர்க்க முடியுமோ அதை சேர்த்து சாப்பிடலாம். 

முருங்கைக்கீரை பராத்தா செய்முறை:

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - இரண்டு கப்

இளஞ்சூடான நீர் - ஒரு கப்

ஓமம் - ஒரு ஸ்பூன்

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

ஸ்டஃப்பிங்

முருங்கைக்கீரை விழுது - 200 கிராம்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - 2

மிளகாய தூள் - 1 டீ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • கோதுமை மாவில் வேக வைத்து அரைத்த பாலக்கீரை விழுது, உப்பு சேர்த்து  இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும். இதில் பால், நெய் சேர்க்கலாம். 
  • ஸ்டஃப்பிங்கிற்கு முருங்கைக்கீரையை கொஞ்ச நேரம் வேக வைத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.  அதோடு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம்  மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை நன்றாக வதக்கி சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும். 
  • தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி செயவ்தற்காக உருட்டி அதில் ஸ்டஃபிங்கை கொஞ்சம் வைத்து மீண்டும் தேய்த்தெடுக்கவும்.
  • மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் பனீர் பராத்தாவை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
  • சுட சுட பாலக் முருங்கைக்கீரை பராத்தா, தயிர், நறுக்கிய வெங்காயம், சேர்த்து சாப்பிடலாம். 
  • அடை செய்யும்போது அதில் முருங்கைக்கீரை சேர்ப்பது மிகவும் நல்லது. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola