உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க இந்த கால்சியம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துகொள்ளவும். ஸ்மூத்தி,சாலட், என செய்து சாப்பிடலாம். உடல்நல ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் அவசியம்.


உங்கள் உணவில் கால்சியம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பது எலும்பு ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் குறிப்பிடத்தக்க வகையில் பயனளிக்கும். சரிவிகித உணவில் கால்சியம் நிறைந்த eன்னென்ன பழங்கள், காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம் என்று இக்கட்டுரையில் காணலாம். 


 Kale கீரை


காலிஃப்ளாவர், கோஸ் ரகங்களை போல கேல் கீரை brassica oleracea வகையைச் சேர்ந்தது. பல வண்ணங்களில் கேல் கீரைகள் கிடிஅக்கும். க்ளோரோபில், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. சீரற்ற ஹார்மோன் சுரப்பு, கொழுப்பு மேலாண்மையில் கேல் கீரை சிறந்ததாக கூறப்படுகிறது. இதை வைத்து சால்ட், தோசை, அடை என செய்து சாப்பிடுங்க. 


ஆரஞ்சுப் பழம்


ஆரஞ்சு கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்தது. இது உணவிலிருந்து கால்சியம் உறிஞ்சுதலை ஊக்குவிக்கும். நோய் எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக செயல்படவும் உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. சால்ட்களில் ஆரஞ்சுப் பழ துண்டுகளை சேர்க்கலாம். ஆரஞ்சு பழத்தை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். வாரம் ஒருமுறை ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம். 


அத்திப்பழம்


அத்திப்பழம் கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்தது. எலும்பு ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் மற்றும் செரிமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது. புதிய அல்லது உலர்ந்த அத்திப்பழங்களை காலை உணவுடன் சாப்பிடலாம்.  சாலட் செய்யும்போது அதோடு சேர்க்கலாம். மில்க்‌ஷேக், ஜூஸ் தயாரிக்கும்போது அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சேர்க்கலாம். இது இனிப்பு சுவை கொடுக்கும். வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இதை பயனபடுத்தலாம்.  குறிப்பாக உலர்ந்த அத்திப்பழத்தில் கால்சியம் அதிகம் உள்ளது.


 ப்ரோக்கோலி


ப்ரோக்கோலி கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்தது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க வேண்டும், நிர்வகிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துகொள்ளலாம்..


Collard greens


Collard greens என்ற கீரையில் கால்சியம் மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளது. இது  எலும்பு வலிமையாக இருக்க உதவும். 


கீரை வகைகள் 


 கீரையில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், தசைகளின் செயல்பாட்டிற்கும், இரத்தத்தில் ஆக்ஸிஜன் பரிமாற்றத்திற்கும் மிகவும் நல்லது. வாரத்தில் 2 நாட்கள் கீரை வகைகளை சமையலில் சேர்க்கவும். 


 கிவி


கிவியில் கால்சியம், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பது உள்ளிட்டவற்றிற்கு உதவுகிறது. உணவில் கிவி பழம் இருக்கட்டும். 


 பாதாம்


 பாதாமில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது எலும்பு ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இரவு ஊறவைத்த பாதாம்களை காலையில் எழுந்ததும் சாப்பிட்டு வரலாம். ஓட்ஸ், மில்க்‌ஷேக் உள்ளிட்டவற்றிலும் சேர்க்கலாம். 


இந்த கால்சியம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம், உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். உடல்நலனும் மேம்படும். 


பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.