உங்கள் பார்ட்னர் உங்களை விட்டு விலகிவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று எண்ணாதீர்கள். அவர்களே வியந்து பார்க்கும் அளவிற்கு உங்களது மனநிலை டான்ஸ், யோகா, வேலை போன்றவற்றில் ஈடுபடுத்துங்கள். நிச்சயம் எந்த வலியையும் நீங்கள் உணரமாட்டீர்கள்.
தான் காதலிக்கும் பெண்ணோ, ஆணோ தன்னை ஏமாற்றிவிட்டால் தேவதாஸாக தாடி வளர்த்துக்கொண்டு, நாயை துணைக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. மேலும் காதலியோ அல்லது காதலனோ, மனைவி அல்லது கணவரோ இந்த உறவுகளில் ஏற்படும் பிரிதல் சொல்ல முடியாத அளவிற்கு வருத்தத்தைத்தான் கொடுக்கும். இது இயல்பான ஒன்று என்றாலும் இன்றைய சூழலில இந்த வலியை நினைத்து மட்டும் பயணித்தால் நிச்சயம் நம் வாழ்க்கைப் பயணத்தை வெற்றிக்கரமாக கொண்டு செல்ல முடியாது. எனவே இதுப்போன்று நீங்கள் உங்கள் துணையைப் பிரிந்து வருந்துகிறீர்கள் என்றால் இனி அப்படி செய்யாதீர்கள். உங்களைப் பிரிந்து சென்ற உங்களது பார்ட்னரை ஸ்வீட்டாக மற்றும் ஸ்மார்ட்டாக பழிவாங்கும் சில வழிமுறைகள் இதோ….
தன்னைக் காதலித்துப் பிரிந்து செல்லும் காதலியை, காதலனை பழிவாங்க வேண்டும் என்பதற்காக முகத்தில் ஆசிட் அடிப்பது, கொலை செய்வது போன்ற குற்றச்சம்பவங்கள் எல்லாம் அரங்கேறும். ஆனால் இனி அப்படி மேற்கொண்டு உங்களது வாழ்க்கையை முடித்துவிடாதீர்கள். நீங்கள் உங்களது காதலனையோ அல்லுது காதலியோ பிரிந்துவிட்டால் முதலில் வருத்தப்படாதீர்கள். இதற்கு மாறாக உங்களது வாழ்க்கையை சிறப்பாக வாழ உடலை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ஜிம். யோகா., டான்ஸ் போன்றவற்றில் உங்களது கவனத்தை செலுத்தி மனமும், உடலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்யும் போது உங்களது முன்னாள் துணையை நினைத்து நீங்கள் நினைப்பதற்கே நேரம் இருக்காது.
குறிப்பாக உங்களது பார்ட்னர் உங்களைப் பிரிந்து சென்றால், அவர்களை நீங்கள் பழிவாங்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இதற்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதே சிறந்ததாக அமையும் எனக்கூறப்படுகிறது. இதற்காக உங்களுக்குப்பிடித்த இடங்களுக்கு சுற்றுலா செல்வது, பிடித்த உணவுகளை உட்கொள்ளது, நண்பர்களுடன் ஜாலியாக இருப்பது போன்ற பல்வேறு விஷயங்களை மேற்கொள்வதோடு அதனை புகைப்படமாக எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனை பேஸ்புக், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போன்றவற்றில் அப்லோடு செய்யுங்கள். குறிப்பாக உங்களது முன்னாள் துணை அறிந்துக்கொள்ளும்படி செய்ய வேண்டும். நீங்கள் சந்தோஷமாக இருப்பது மட்டுமே நல்ல பழிவாங்குதலுக்கு அறிகுறியாகும்.
இதோடு மட்டுமின்றி இன்றைக்கு சமூக ஊடகங்களில் பல காதல்களில் மலரும் நிலையில் அதனையே நீங்கள் ஸ்மார்ட்டாக பழிவாங்கும் ஆயுதமாக வைத்துக்கொள்ளலாம். பார்ட்னரை காதலித்தாலும், பிரிந்து சென்றாலும் அனைவரும் கவிஞராக மாறிவிடுவோம். எனவே உங்களின் முன்னாள் உறவு குறித்து உங்கள் மனதில் தோன்றுவதை எழுதி போஸ்ட் செய்யலாம். இதனால் உங்கள் ஆழ்மனதில் நீங்கள் புதைத்து வைத்திருந்த பல விஷயங்களை நீங்கள் வெளிப்படுத்தலாம். இதனால் உங்களது மனமும் சாந்தியடையும்.
புதிய நல் உறவுடன் நட்பு கொள்வது: உங்களின் முன்னாள் உறவு சரியாக இல்லை என்றால், காதல் பிரிந்து விட்டது என்பதற்காக உங்களது வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற அர்த்தமில்லை. உங்களது வாழ்வில் பலவிதமான நல்ல மனிதர்களை சந்திக்க நேரிடும். அவர்களில் உங்களது மனதிற்கு பிடித்த ஒருவரை தேர்வு செய்து அவருடன் உங்களது மனதில் உள்ளதை பகிருங்கள். அதேப்போன்று மறக்காமல் உங்களின் பழைய உறவுகள் குறித்து தெரியப்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்களிடம் உள்ள பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புது வாழ்க்கையை தொடங்குங்கள். இந்த முயற்சி உங்கள் முன்னாள் துணைக்கு நிச்சயம் சிறந்த பதிலடியாக இருக்கும். எனவே காதல் தோல்வியால் தற்கொலை செய்துக்கொள்வது, கொடூரமாக பழிவாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் மேற்கூறிய ஸ்மார்ட்டான வழிமுறைகளை நீங்கள் கடைப்பிடித்து உங்களது வாழ்க்கைப் பிரகாசமாக்கிக்கொள்ளுங்கள்..