பணியிடங்களில் பல்வேறு விதிமுறைகள் இருக்கும். இது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். சில இடங்களில், சுதந்திரம் இருக்கும்; பணி நேரத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளாக சில நிறுவனங்கள் பின்பற்றும். பணியிடத்தில் தொலைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கும்.இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும்.
அலுவலக நேரத்தில் பணியாளர்கள் முடிந்தவரை நிறுவனத்திற்கு எந்த அளவிற்கு ப்ரட்க்டிவிட்டி அளிக்க முடியும் என்பதை நிர்வாகம் கவனிக்கும். அதற்கேற்றவாறு விதிமுறைகளை அறிவிக்கும்.அப்படி ஒரு கடிதம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது. ஹெச்.ஆர். ஒருவரின் இ-மெயில் குறித்த தகவல்கள் டிவிட்டரில் பேசுப்பொருளாகியுள்ளது.
ஹெச்.ஆர். அதிகாரி ஒருவர் இ-மெயிலில் ‘பணியாளர்கள் யாரும் ஹெட்ஃபோன்கள் பயன்படுத்த கூடாது.’ என்று செய்தி அனுப்பியுள்ளது.
இந்த அறிவிப்பை ரெட்டிட் தளத்தில் வெளியிட்டு ஒருவர், ‘மும்பையில் உள்ள ஹெச்.ஆர். அதிகாரிகளே! இது குறித்து உங்களின் கருத்து என்ன?’ என்று கேள்வியெழுப்பிள்ளார்.
ஹலோ மக்களே,
அலுவலக நேரத்தில் பெரும்பால பணியாளர்கள் ஹெட்ஃபோன் பயன்படுத்துவதை கவனித்து வருகிறோம். இதன் மூலம் நீங்கள் வேலையில் முழு கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல், இந்த நடவடிக்கையால் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
வேலைகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவில்லை என்ற பிரச்சனையையும் க்ளையன்ட் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எனவே, பணி நேரத்தில் அனைவரும் ஹெட்ஃபோன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம். இது நம் பணியை சிறப்பாக செய்து முடித்திட உதவியாக இருக்கும். புரிதலுக்கு நன்றி!
இவ்வாறு ஹெச்.ஆர். அனுப்பியுள்ள இ-மெயிலில் குறிபிடப்பட்டுள்ளது. இந்த மெயிலின் ஸ்கிரீன்சாட் டிவிட்டரில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வைரல் டிவீட்டிற்கு பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அலுவலக சூழ்நிலை காரணமாகவே ஹெட்ஃபோன்கள் பயன்படுத்திக்றோம்; வேலையில் முழு கவனம் செலுத்துவதற்காகவே இப்படி செய்கிறோம். என்று ஒரு பதிவர் தனது பணி அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், “நான் இன்ட்ரோவர்ட். பெரிதாக யாரிடமும் பேச இயலாதா நிலைஎன் அலுவக நேரத்தில் ஹெட்ஃபோன் பயன்படுத்துவேன். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பதற்காகவும், உரிய நேரத்தில் வேலையை முடித்திவிட்டு செல்லவும் இது எனக்கு உதவும்.” என்று குறிப்பிட்டுள்ள அவர், இதற்கெல்லாம் விதிமுறை என்பது ஏற்றுகொள்ள முடியவில்லை என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில், ஹெச்.ஆர். அதிகாரியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு, ஆதரவும் நிலவி வருகிறது. டிவிட்டரில் பலரும் இதற்கு எதிராக கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். பணியிடத்தில் ஹெட்ஃபோன் அணிய தடை விதிப்பது சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் இது முட்டாள் தனமான முடிவு என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சிலர் ஹெட்ஃபோன் அணிவதே சுற்றி நடப்பதை கவனிக்காமல், வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் என்று கமெண்ட்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பிற்கு ஒருவர்,” இதென்ன புதிதா, எங்கள் அலுவலகத்தில் பணியாளர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பய்னபடுத்துவதைப் பார்த்த உயர் அதிகாரி, மறுநாளில் இருந்து காலையில் வந்ததும் அனைவரிடமும் இருந்து ஸ்மாட்ஃபோன்களை வாங்கி அதற்கென தனியாக வைத்திருக்கும் ட்ரேயில் வைத்துவிடுவார். பணி நேரத்தில் ஹெட்ஃபோன் அனுமதியில்லை என்பது எனக்கு புதிதாக தெரியவில்லை. ” என்று பதிவிட்டுள்ளார்.