தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் பக்தி நிறைந்ததாக கருதப்படுகிறது.திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் கோயில்களில் பாடப்படும்.
ஆருத்ரா தரிசனம் அன்று திருவாதிரை களி செய்து பூஜை செய்யப்படும். திருவாதிரை நட்சத்திர நாளில் சிறப்பு பூஜை செய்யப்படும்.
என்னென்ன தேவை?
அரிசி - ஒரு கப்
வெல்லம் (பொடித்தது ) - ஒன்றரை கப்
தண்ணீர் - இரட்னை கப்,
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
முந்திரி - ஏலக்காய்த் தூள் - நெய் - சிறிதளவு..
செய்முறை
அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் தனித்தனியே வறுத்துத்தெடுக்கவும். பொன்னிறம் வரும் வரை மட்டுமே.. அரிசியை ரவை போல நன்றாக உடைத்துக் கொள்ள வேண்டும். அரிசி ரவையில் தண்ணீர் தெளித்து கிளறி நன்றாக வேக வைக்கவும். கடலைப்பருப்பு, பாசிப்பருப்புடன் நீர் சேர்த்து. குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்.
வெல்லத்துடன் சிறதளவு தண்ணீர் சேர்த்து அது கரைந்தவுடன் வடிகட்டிக் கொள்ளவும். பின்னர்,அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வெல்ல கரைசலை வைத்து அது நன்றாக கொதிக்கும்போது (பாகு நிலையில்) அரிசி ரவை, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் நெய் விட்டு நன்றாக கிளவும். அரிசி வெந்ததும் நெய்யில் முந்திரியை வறுத்து இதோடு சேர்க்கவும். அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.
அவ்வளவுதான் திருவாதிரை களி ரெடி..