தோல் பராமரிப்பு, தோல் ஆரோக்கியமாக இருக்க பெரும்பாலோனோர் முதலில் செய்வது வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு நிவாரணம் தேடுவது. அது போன்று செய்வதில் பெரும் பிரச்சனைகள் வரும் என தோல் சிகிச்சை நிபுணர்  கீதிகா மிட்டல் குப்தா அவர்கள் தனது சமூகவலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து இருக்கிறார். வீட்டில் இருக்கும் அனைத்து பொருள்களும் சரும பிரசனைக்கு மருந்தாக இருக்காது.


என பொருளை பயன்படுத்துவதால், என்ன மாதிரியான பின் விளைவுகள் வரும் என தெரிந்து கொள்வோம்.


எலுமிச்சை - இது அமிலத் தன்மை நிறைந்து இருப்பதால், சருமத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது இது எரிச்சல், அரிப்பு, தோல் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.




இலவங்க பட்டை - இது சருமத்தை சேதப்படுத்தும். தோல் தன்மையை மாற்ற கூடியதாக இருக்கும். தோல் இயல்பான நிறத்தை மாற்றும்.




மஞ்சள் - மஞ்சள் போன்ற மசாலா பொருள்கள் கூட அளவாக பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமானால் சரும பிரச்சனைக்கு வழிவகுக்கும்.




ரீபைன்ட் ஆயில் - எண்ணெய் பயன்படுத்தினால், சரும துளைகள் அடைத்து கொள்ளும். இதனால் எண்ணெய் பசை அதிகமாகி இது முகப்பரு, அரிப்பு, கட்டிகள் போன்றவை வரும்.




ஆப்பிள் வினிகர் - இது அமில தன்மை அதிகமாக இருப்பதால், இது சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


 






இது போன்ற பல்வேறு விஷயங்களை அவர் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். சரும ஆரோக்கியத்திற்கு என்ன மாதிரியா உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும். சருமத்தை ஆரோக்கியமாக புத்துணர்வுடன் வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என ஏராளமா தகவல்கள் பகிர்ந்து வருகிறார்.