பைப்பரேசியே என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது மிளகு. இது நறுமணப் பொருட்களில் மிகவும் விலை உயர்ந்தது. மிளகு நஞ்சை முறிக்கும் அளவுக்கு ஆரோக்கிய குணங்கள் நிறைந்தது. ஆயுர்வேத மருத்துவத்தில் மிளகு மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. கார சுவை கொண்ட மிளகை அப்படியே எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் பொடி செய்தும் பயன்படுத்தலாம். இத்தகைய மிளகில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் குவிந்துள்ள ஃப்ரீ ரேடிக்கல்களைக் குறைக்கிறது. இதனால் செல்கள் சேதமடைவது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக  சரும சுருக்கம், வயதான தோற்றம் போன்றவை தடுக்கப்படுகிறது. 

Continues below advertisement

நம்மில் அனைவரும் சருமத்தை இயற்கையாகவே பளபளப்பாக வைத்திருக்க விரும்புகிறோம். அதற்கு கருப்பு மிளகு உதவும். அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும பிரச்சினைகளைக் குறைத்து  உங்கள் முகத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். பரு, வடு போன்றவற்றை குறைக்கும்.

சில நேரங்களில் அதிக உணவை சாப்பிட்ட பிறகு வயிற்றில் கனமாகவோ அல்லது வாயுவாகவோ அடிக்கடி உணர்வோம். அத்தகைய சூழ்நிலையில் கருப்பு மிளகு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது வயிற்றில் அமில உற்பத்தி செயல்முறையை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக உணவு எளிதில் ஜீரணமாகும்.

Continues below advertisement

கருப்பு மிளகில் இருக்கும்  பைப்பரின் மூளைக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. இது மனநிலை, செறிவு மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒவ்வொரு நாளும் சிறிது மிளகை உட்கொள்வது மனரீதியாக சுறுசுறுப்பாக இருக்க உதவும்.நீங்கள் சளி, இருமல் பிரச்னைகளால் அவதிப்பட்டால் அதற்கு மிளகு சிறந்த தீர்வாக அமையும். அதிலுள்ள இயற்கையான வெப்பம் சளியை சரி செய்கிறது. நன்கு காய்ச்சிய பாலில் மிளகை பொடி செய்து கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து குடிக்கலாம். இது தொண்டை பிரச்னை, நெஞ்செரிச்சல், வாயு பிரச்னை போன்றவற்றை சரி செய்யும். 

கருப்பு மிளகில் இருக்கும் பைப்பரின் என்ற தனிமம் காரணமாக உடலின் வளர்ச்சிதை மாற்றம் துரிதப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உடலில் ஆற்றல் மேம்படுகிறது. இதன் காரணமாக கலோரிகள் எரிப்பது சீராக நடக்கும். எனவே உணவில் மிளகு சேர்க்கப்பட்டால் அதனை எக்காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம்.இந்த மிளகு கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் அதன் செயல்பாடு சீராக நடைபெறுகிறது. இதன்மூலம் நம்முடைய உடலின் இயக்கம் சீராகவும், ஆரோக்கியமாகவும் உணர வைக்கிறது. 

மிளகில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இதனால் எளிய நோய்கள் கூட நம்மை அண்டாது என நம்பப்படுகிறது.