ஒரு நாளைக்கான ஆற்றலை வழங்க கூடியது காலை உணவு. இரவு உணவு சாப்பிட பிறகு நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால் காலை உணவையும் தவிர்க்க கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
காலை உணவு நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் உள்ளிட்டவைகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்த, அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட, துரித உணவு போன்றவற்றை காலை உணவாக சாப்பிட கூடாது.
காலை உணவில் எதெல்லாம் சாப்பிட கூடாது என்பது பற்றி மருத்துவர்கள் தெரிவிப்பதை இங்கே காணலாம்.
பிரெட்:
காலை உணவிற்கு பிரெட் டோஸ்ட், பிரெட் ஜாம் உள்ளிட்டவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், மைதா பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அதோடு, பிரெட் பதப்படுத்தப்பட்ட உணவு. ஸ்நாக்ஸ் நேரத்தில் எப்போதாவது இதை சாப்பிடலாம். ஆனால், காலை உணவிற்கு சாப்பிடுவதை தவிர்க்கலாம். ஏனெனில் இதில் தேவையான அளவு ஊட்டச்சத்து இல்லை.
சர்க்கரை அதிகமுள்ள கார்ன் ப்ளேக்ஸ்:
காலை உணவாக கார்ன்ப்ளேக்ஸ், cereal ஆகியவற்றை காலை உணவாக சாப்பிட கூடாது. இதில் சர்க்கரை சேர்க்கபடுவதால் ஊட்டச்சத்துக்கள் இருந்தும் இதை காலை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் நார்ச்சத்தும் குறைவாக உள்ளது.
ஜூஸ் வகைகள்:
ஜூஸ் வகைகளை திட உணவுகள் எதுவும் சாப்பிடாமல் குடிப்பது நல்லதல்ல. ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை வேகமாக அதிகரிக்க செய்யும். பழச்சாறாக குடிக்காமல் காலை உணவில் பழங்களை அப்படியே சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. பழச்சாறு குடிப்பதாக இருந்தால் காலை 11 மணி அளவில் குடிக்கலாம். அதுவும் சர்க்கரை சேர்க்காமல் இருப்பது நல்லது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி:
காலை உணவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இறைச்சி ஊட்டச்சத்து நிறைந்தது என்றாலும் பதப்படுத்தப்படுவது ஆரோக்கியமற்றது. பல்வேறு உடல்நிலை பாதிகப்புகளுக்கு வழிவகுக்கும்.
யோகர்ட்:
யோகர்ட் மற்றும் ப்ரோபயாடிக்குகளின் நல்ல ஆதாரமாக இருந்தாலும், சர்க்கரை சேர்க்கப்பட்ட யோகர்ட் காலை உணவுக்கு சிறந்த தேர்வாக இருக்காது. அதற்கு பதிலாக, வீட்டில் தயார் செய்யும் தயிர் சாப்பிடலா,. கடைகளில் வாங்குவதாக இருந்தால் இனிப்பு சேர்க்கதாகவற்றை வாங்கலாம்.
எதை காலை உணவில் சேர்க்கலமா?
இட்லி, தோசை உடன் சாம்பார், சட்னி, கோதுமை ரவை உப்புமா, சிறுதானியங்கள் கொண்டு செய்யப்பட்ட உணவு வகைகளுடன் பழங்கள், நட்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.
வேக வைத்த முட்டை, ஆம்லெட் சாப்பிடலாம். முட்டையில் புரதம் மற்றும் பி வைட்டமின்கள், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து , கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன.
பிரெட் டோஸ்ட் சாப்பிட விரும்புபவர்கள் முழு தானிய பிரெட் தெரிவு செய்யலாம். இருப்பினும் காலை உணவிற்கு சிறந்த தேர்வு இல்லை என்றே சொல்கிறார்கள்.
சியா விதைகள் நார்ச்சத்து நிறைந்தவை. சியா விதைகள் சேர்த்து ஓட்ஸ், யோகர்ட் உடன் சேர்த்து சாப்பிடலாம். புரோட்டீன் ஷேக்கில் சேர்க்கலாம். புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவைகளும் இதில் நிறைந்துள்ளன. இதோடு, சூரியகாந்திவிதை, பூசணி விதை உள்ளிட்டவற்றையும் சேர்த்து சாப்பிடலாம். நட்ஸ் வகைகளில் சத்துக்கள் இருப்பதால் அவற்றை காலை உணவில் சேர்ப்பது ஆரோக்கியமானது. இதோடு, உங்கள் உடலுக்கு எது நன்மை தரும் என்பதையும் கவனத்தோடு சாப்பிடலாம்.