வீட்டை அழகுபடுத்துவதற்காக வீட்டிற்குள் செடி வளர்க்கும் பழக்கம் அதிகமாகி கொண்டு இருக்கிறது. இது அழகுக்காக மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்காகவும் வளர்க்கலாம். இந்த கொரோனா காலத்தில் முகக் கவசம் அணிந்து வெளியிலே செல்வதால், சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் இருக்கும். முகக் கவசம் அணிவது, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளவும், சுற்றுசூழலில் இருக்கும் மாசுக்களை தடுக்கவும் பயன்படுகிறது.


வீட்டிற்குள் இருக்கும் சுத்தமாக காற்றை சுவாசிப்பது, முழுமையாக  ஆக்சிஜன் எடுத்து கொள்வது என பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது அழகு தாவரங்கள். எந்த தாவரம் என்ன மாதிரியான நன்மைகளை கொண்டுள்ளது என தெரிந்து கொள்வோம்.


கற்றாழை - இது ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை தாவரமாகவும். வீட்டிற்குள் வளர்ப்பதற்கு ஏற்ற தாவரமாகும். இது சுற்றுசூழலில் இருக்கும் காற்றை சுத்தம் செய்து ஆக்சிஜன் அதிகமாக்குகிறது.  கற்றாழை சரும பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும்.




பாம்பு செடி - இதன் இலைகள் பாம்பு போன்று இருப்பதால் இது பாம்பு செடி என அழைக்கப்படுகிறது. பென்சீன், ஃபார்மால்டிஹைட், ட்ரைக்கோரெத்திலீன் மற்றும் சைலீன் போன்ற நச்சுக்களை காற்றில் இருந்து நீக்குகிறது. இந்த செடிக்கு பெரிய அளவில் பாராமரிப்பு தேவை இல்லை என்பதால் எளிதாக வீட்டில் வளர்க்க முடியும். வீட்டின் உலர்ந்த ஒரு மூலையில் வைத்தால் கூட சூப்பர் ஆக வளரும்




மூங்கில் பனை - நிறைய பூங்காக்கள், வெளி இடங்களில் அதிகமாக வளர கூடியது. இப்போது அழகுக்காக வளர்க்கிறார்கள். வீட்டிலும், அலுவலகத்திலும் இது வளர்க்க படுகிறது. 12 அடி உயரம் வரை வளர கூடியது இது. இது காற்றை சுத்தம் செய்து தூய்மையான காற்றுடன் நுரையீரலை பலப்படுத்துகிறது.




சிலந்து செடி - இந்த செடியின் இலைகள் சிலந்தியின் கால்கள் போன்று இருப்பதால் இது சிலந்து செடி என அழைக்கப்படுகிறது. இந்த வீட்டு தாவரத்தை எளிமையாக வளர்க்கலாம். ஒரு தொட்டியில் செடியை வைத்து ஜன்னல் ஓரத்தில் வைத்தால் போதுமானது. காற்றை தூய்மை படுத்தி சுத்தமான காற்றை அனுப்பும்.




டெவில்ஸ் ஐவி ( மணி பிளானட் ) - இது பெரும்பாலானோர் வீட்டில் வளர கூடியது. சிலருக்கு இதை வளர்ப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். குறைவான பராமரிப்பு நேரத்தில் நீண்ட பலன்களை பெறலாம். இது சைலீன், ஃபார்மால்டிஹைட் போன்ற நச்சுக்களை காற்றில் இது நீக்குகிறது. இது கொடியாக வளர கூடியது. இது தொட்டி மற்றும் கூடை இரண்டிலும் வளரும்.




கால்களில் சர்க்கரம் கட்டி கொண்டு வேலை செய்யும் இந்த நாட்களில் இதை எல்லாம் செய்ய முடியுமா என்று கேட்கிறீர்களா? குறைவான பராமரிப்பு நேரத்தில் அதிக நன்மைகளை பெறலாம். தூய்மையான காற்று புத்துணர்வுடன் வாழ்வதற்கு அவசியம். இதையும் உங்கள் அன்றாட வாழ்வில் ஒரு பழக்கமாக மாற்றி கொள்ளுங்கள்.