குளர்காலம், கோடைகாலம் இரண்டிலும் சருமத்திற்கு அதிக கவனம் தேவைப்படும். கோடை வெயிலின் தாக்கம் உடல்நலனின் மட்டுமல்ல சருமத்தையும் பாதிக்கும். சரும வெடிப்பு, வறட்சி உள்ளிட்டவைகள் ஏற்படும். வெயில் காலத்தில் தண்ணீர் அதிகம் குடிப்பது உடலுக்கு நல்லது என்பதோடு சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.சருமத்திற்கென தனியாக சில வழிமுறைகளை கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.  


கோடைகாலம் என்றால் வெப்பம், வியர்வை இருக்கும். வியர்வையும் கோடைகாலத்தில் நல்லதுதான். உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதை தடுக்கக் கூடாது என்று மருத்துவ உலகம் அறிவுறுத்துகிறது. ஏனெனில், உடலின் வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்றுவதால் உடலில் குளிர்ச்சி ஏற்படும். எனவே, ஆரோக்கியமான உணவுமுறையுடன் கோடை கால சரும பராமரிப்புகளை காணலாம். 


கோடை காலத்தில் சரும பராமரிப்பு 


அடிக்கடி முகம் கழுவுதல் 


வெயில் காலத்தில் சருமம் அதிகளவில் வெப்பம் மற்றும் அழுக்கு ஆகியவற்றை எதிர்கொள்ளும். அதனால், அடிக்கடி முகம் கழுவுவது மிகவும் முக்கியம். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்போது, அதிகளவு ரசாயனம் இல்லாத சோப் அல்லது ஃபேஸ்வாஷ் பயன்படுத்துவது முக்கியம். உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு சோப் அல்லது ஃபேஸ்வாஷ் தேர்வு செய்வது சருமத்திற்கு நல்லது. ஒரு நாளைக்கு இரண்டு முறை முகம் கழுவுவது நல்லது. 


தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்


கோடைகாலத்தில் தண்ணீர் அதிகளவில் குடிப்பது சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க மிகவும் அவசியமானது. போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் சருமம் வறட்சி ஏற்படுத்துவதற்கு அதிகளவு வாய்ப்பு இருக்கிறது. உடலில் நீர்ச்சத்து அளவை சீராக பராமரிப்பதற்கும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடநல ஆரோக்கியத்திற்கும் இது உதவும். 


மாய்சரைஸர்


உங்களுடைய சருமம் எளிதில் வறண்டுவிடக் கூடியது என்றால் அதற்கேற்றவாறு தினமும் மாய்சரைஸர் பயன்படுத்த வேண்டும்.ஆயில் பேஸ்டாக இல்லாத க்ரீம் அல்லது லோசன் சிறந்த தேர்வாக இருக்கும். ஹைட்ராலிக் ஆசிட் (hyaluronic acid),   கிளிசரின் (glycerin) ஆகியவைகள் உள்ள மாய்சரைஸர் வாங்குவது நல்லது. 


சன் ஸ்கிரீன் முக்கியம் பாஸ்


கோடைகாலத்தில் வெளியே செல்லும்போது சன்ஸ்ட்கிரீன் பயன்படுத்துவது சரும பராமரிப்பு லிஸ்டில் இருக்க வேண்டிய முக்கியமான ஒன்று. தேவையில்லாமல் வெயில் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கலாம். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவசியம் தவிர வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. 


உடல் ஆரோக்கியம்:


தர்பூசணி ரோஸ் மில்க்: 


பாலில் சர்க்கரை மற்றும் ரோஸ் மில்க்கை சேர்த்து பொடியாக நறுக்கிய தர்பூசணியை சேர்த்து குடிக்கலாம். வெளியே சென்று வருபவர்களுக்கு இதனை கொடுக்கலாம்.  தர்பூசணி மட்டுமே ஜுஸாக குடிக்கலாம். இதில் சர்க்கரை சேர்க்காமலும் குடிக்கலாம். 


மிண்ட் ஜூஸ்: 


லெமன், புதினா, சர்க்கரை தேவையான அளவு சேர்த்து தண்ணீர் விட்டு மிக்ஸியில் ஜூஸ் அடித்து குடிக்கலாம். உடல் உஷ்ணத்தை இது தணிக்கும். 


நன்னாரி இளநீர் சர்பத்: 


இளநீரில் தேவையான அளவு நன்னாரி சர்பத்தை சேர்த்து கலந்து, இளநீரில் இருக்கும் வழுக்கையை பொடியாக நறுக்கி போட்டு குடிக்கலாம். 


லெமன் ஜிஞ்சர் ஜூஸ்: 


லெமன், இஞ்சி, சர்க்கரை சேர்த்து தண்ணீர் அல்லது சோடா கலந்து குடிக்கலாம். வெயிலில் பலருக்கும் அஜீரண கோளாறு ஏற்படும். இந்த ஜூஸ் குடித்தால் அது சரியாகும். 


இந்த கோடை கால டிரிங்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும்.