கால் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை. அதனால் வறட்சியாக இருக்கும். வறட்சியாக இருப்பதால், சரும வெடிப்பு வருகிறது. நாளடைவில் இது வலியுடன், நடப்பதற்கு கூட கஷ்டமாக மாறி விடும். சரும வறட்சி வராமல் போதுமான நீர் சத்து இருக்குமாறு பராமரிக்க வேண்டும். போதுமான பாமரிப்பு இருந்தால் குதிங்கால் வெடிப்பை ஈசியாக சமாளிக்கலாம்.




குதிங்கால் வெடிப்பு இருந்தால் முதலில் செய்ய வேண்டியது, ஒரு பக்கெட்டில் வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து சிறிதளவு உப்பு, எலுமிச்சை சேர்த்து 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். அப்படி செய்தல் வெடிப்பில் இருக்கும் செல்கள் நீங்கும். மேலும் ஏதேனும் தொற்று இருந்தாலும், அவை நீங்கிவிடும். கடினமான, இருக்கும் சருமம், மென்மையாக மாறும். பிறகு சுத்தமாக கால்களை துடைத்து அதில் தேங்காய் எண்ணெய் தடவலாம். இப்படி செய்வதால் பாதத்திற்கு தேவையான நீர் சத்து கிடைக்கும். வெடிப்பும் குறையும்.




தேன் - பாத வெடிப்பில் தேன் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் கழுவ வேண்டும். இது பதத்திற்கு தேவையான நீர் சத்தை தருகிறது. தேன் இயற்கையாகவே, ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல்பண்புகளை கொண்டுள்ளது. அதனால் இயற்கையாக ஈரப்பதத்துடன் இருக்க உதவும். 


வினிகர் - ஏதேனும் பூஞ்சை தொற்றுகளால் இந்த வெடிப்பு ஏற்பட்டு இருந்தால் , அதற்கு சிறந்த வழி , வினிகர் கலந்த தண்ணீரில் காலை ஊறவைப்பது தான். இது தொற்றில் இருந்து பாதுகாக்கவும், காலை நீர்ச்சத்துடன் வைக்கவும் உதவும்.





வாழை பழம் - வாழைப்பழம் குதிங்கால் வெடிப்பிற்கு சிறந்த மருந்தாகும். இனிமேல் வாழை பழம் சாப்பிடும் போது அதன் தோலை வெடிப்பில் தடவி கொள்ளலாம். தடவி 20 நிமிடங்கள் கழித்து சுத்தமாக கழுவவும். இப்படி செய்தால் குதிங்கால் வெடிப்பு நீங்கும்.




ஆலிவ் ஆயில் - இதில் ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து இருக்கிறது. ஆலிவ் எண்ணையை கால்களில் தடவி லேசான மசாஜ் செய்து 20-30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு கழுவலாம். அப்படி செய்வதால் குதிங்கால் தேவையான நீரேற்றத்துடன் இருக்கும்.




பாப்பாளி - வாழை பழத்திற்கு அடுத்த பப்பாளி குதிங்கால் வெடிப்பிற்கு சிறந்த மருந்தாக இருக்கும். பப்பாளி பழத்தை மசித்து குதிங்கால் வெடிப்பில் தடவி, ஊறவைத்து பின்னர் கழுவலாம். இது வெடிப்பிற்கு சிறந்த மருந்தாக இருக்கும்.


இது போன்ற இயற்கையான வழிமுறைகள் கொண்டு குதிங்கால் வெடிப்பை சரி செய்யலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம். இது உடல் வறட்சி ஏற்படாமல் பார்த்து கொள்ளும். ஒரு நாளைக்கு 2- 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதும், உடல் வறட்சி ஏற்படாமல் இருக்க உதவும்.