குளிர்காலம் வந்துவிட்டது. சரும பராமரிப்பு மிகவும் முக்கியம். எப்போதும் மென்மையான சாரல்.. காற்றில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். பனி, குளர்காற்று என இருந்தாலும் உடல்நலனைப் பேணுவதில் சவாலான பருவகாலம் என்று சொல்வது சரியாக இருக்கும். 


சளி, இருமல், தொண்டை கரகரப்பு என தொற்று அதிகம் பரவும் காலம் இது. தலைமுடி வறண்டுவிடும்; ஃப்ரிஸியாக இருக்கும். குளிர்காலத்தில் உடல்நலனுக்கு எப்படி கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவனிப்பு தேவைப்படுகிறதோ சருமத்திற்கும் தலைமுடிக்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சில மாற்றங்களை செயதால் போதும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


தலைமுடியை இயற்கையாக ஈரப்பதத்தை தரவல்லது ஸ்கால்பில் உள்ள ஆயில் க்ளாண்ட்ஸ். அதுவும் குறைந்துவிட்டால் ஈரப்பதத்தின் அளவும் குறைந்துவிடும். தலைமுடியை பராமரிக்க விலையுயர்ந்த ஷாம்பி, சீரம், எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்றில்லை. உணவுமுறை மாற்றம் போதுமானது.


தண்ணீர் குடிக்க மறக்காதீங்க


குளிர்காலம் என்பதால் அதிகமாக தாகம் எடுக்கும் வாய்ப்பு இருக்காது. ஆனாலும், ஒரு நாளைக்கு தேவையான அளவு தண்ணீரை குடிக்க மறக்காதீர்கள்.சரும பராமரிப்பிற்கும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கவும் தண்ணீர் குடிப்பது ரொம்பவே முக்கியம். இதன் மூலம் செல்களுக்கு ஆக்ஸிஜன் கடத்தப்படுவது சீராக நடைபெறும். இதில் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும். குளிர்காலத்தில் முடி வறட்சியடையாமல் பாதுகாக்கும். 


சீசனல் பழங்கள், காய்கறிகளை சாப்பிடவும்


குளிர்காலத்தில் கிடைக்கும் பழ வகைகள், காய்கறி ஆகியவற்றை சாப்பிட வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின்ஸ், மினரஸ் நிறைந்த உணவுகளை சாப்பிடவும். 


ஆல்கஹால் அளவோடு இருக்கட்டும்


குளிர்காலத்தில் ஒரு க்ளாஸ் ஆஃப் வைன், பீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை அளவோடு பின்பற்றவும். அதிகமாக குடித்தால் முடி வளர்ச்சி தடைப்படும்.


எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்கவும்


குளிர்காலம் என்பதால் செரிமான சக்தியும் சற்று குறைவாகவே இருக்கும். சரும் ஆரோக்கியம், முடி வளர்ச்சி என எதுவானாலும் துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.


ஆரோக்கியமான முடி வளர்ச்சி:


பொடுகுத் தொல்லை நீங்க...


கெமோமில் எண்ணெய் இயற்கையிலேயே பொடுகு பிரச்சினைக்கு தீர்வினை கொண்டிருக்கிறது. இந்த எண்ணெயை பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லையை பெருமளவு குறைக்கிறது. இது பேன் பிரச்சனையையும் தீர்க்கிறது. இது முடியின் வேர்க்கால்களை ஹைட்ரேட் செய்து, உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரிச்சலை நீக்குகிறது. தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து இதை பயன்படுத்தாம். இதனை கொண்டு தலைக்கு ஆயில் மசாஜ் செய்தால் ரிலாக்ஸாக உணரலாம்.


இது முடியை மென்மையாக்குகிறது. முடிக்கு சிறந்த மாய்சரைசராக பயன்படுகிறது. முடியை பளபளப்பாக மாற்றுகிறது. இதை தேங்காய் எண்ணெய்க்கு பதிலாகவும் இதை பயன்படுத்தலாம். பொலிவற்ற,  சேதமடைந்த மற்றும் உயிரற்ற முடி இருந்தால் கெமோமில் எண்ணெய் அதை சரி செய்துவிடும். 


மாசு, தூசி போன்ற ஏராளமான சுற்றுச்சூழல் நிலைமைகள் காரணமாக முடி வெடிப்பு ஏற்படுகிறது. இழந்த பிரகாசத்தை மீண்டும் பெற, நீங்கள் கெமோமில் எண்ணெயைப் பயன்படுத்த தொடங்காலாம்.  ஹேர் வாஷ் செய்த பிறகு ஹேர் சீரம் ஆகவும் பயன்படுத்தலாம்.


ஹேர் கலரிங்:


முடிக்கு கலரிங் செயதால், அதாவது இயற்கையான முறையில்,  மருதாணி/ ஹென்னா பயன்படுத்தினால், அந்த பேஸ்டில் சில துளிகள் கெமொமில் எண்ணெயைச் சேர்க்கவும். இதனால் முடி பளபளப்புடனும் நல்ல நிறத்துடனும் இருக்கும்.