30 வயது ஆரம்பத்தில் ஹார்மோன் மாற்றங்கள் தொடங்கும். 18 வயதில் அதிகமாக சுரக்கும் ஹார்மோன்கள் அனைத்தும், 30 வயதில் குறைய தொடங்கும். இந்த நேரத்தில் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள், நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் வரும். இந்த வயதில் வரும் பிரச்சனையை எதிர் கொள்வதற்கு சில எளிய ஆலோசனைகளை பாப்போம்


சுத்தம் செய்தல் - இரவு தூங்குவதற்கு முன் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும். மேக் அப் அனைத்தையும் சுத்தமாக நீக்கி, நீரில் முகத்தை கழிவு பின் தூங்க செல்ல வேண்டும். இது முகத்தில் சேர்ந்து இருக்கும் கழிவுகளை சுத்தமாக நீக்க உதவும். முகத்திற்கு இரவு கிரீம்களை பயன்படுத்தலாம். மருத்துவர் பரிந்துரைக்கும் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். மார்க்கெட்டில் கிடைக்கும் அனைத்து கிரீம்களும் சருமத்திற்கு ஏற்றதாக இருக்காது.




​எக்ஸ்போலியேட்- படுக்கைக்கு செல்வதற்கு முன் ​எக்ஸ்போலியேட் செய்து கொள்ளுங்கள். ​எக்ஸ்போலியேட் செய்வது சருமத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.உங்களின் சருமத்தில் அதிகம் எண்ணெய் அதிகமாக சுரந்தாலோ, அல்லது முகப்பரு அதிகமாக இருந்தாலோ, ​எக்ஸ்போலியேட் செய்து கொள்ளுங்கள். இது சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.




சன் ஸ்க்ரீன் கிரீம்  - ஆன்டி ஆக்ஸிடன்ட் சீரம் அல்லது வைட்டமின் சி சீரம் ஆகியவை சேர்த்து சன் ஸ்க்ரீன் கிரீம் பயன்படுத்துங்கள். இது சருமம் புத்துணர்வுடன் இருக்க உதவும். அனைத்து பருவத்திலும் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவது, சரும புத்துணர்ச்சியாக இருக்க உதவும்.


நீரேற்றமாக இருக்கவும் - குளிக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்துங்கள். அதிக குளிர்ச்சியாகவும், அதிகம் சூடாகவும் இருக்கக்கூடாது. இரண்டு அதிகமான வெப்பநிலையும் பயன்படுத்துவதால்  சருமச் சுருக்கம் ஏற்படும்.  5 நிமிடத்திற்கு மேல் குளிக்கக்கூடாது




போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள் - போதுமான அளவு தண்ணீர்  குடிப்பது,சருமம் புத்துணர்வுடன் இருக்க உதவும். முகத்தில் வரும் சுருக்கம், கோடுகள் வராமல் பார்த்து கொள்ளும். தினம் 2-3 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது அனைத்து ஹார்மோன் மாற்றங்களில் இருந்து சிறந்த தீர்வாகும்.




மன அழுத்தம் இல்லாமல் இருக்கவும் - மனஅழுத்தம் வயதான தோற்றத்தை தரும். முடிந்த வரை ரிலாக்ஸாக இருக்க முயற்சி செய்யுங்கள். தற்போது இருக்கும், வேலை சூழல், சுற்றுச்சூழல், பணிச்சுமை போன்ற காரணங்களால் அதிக மனஅழுத்தம் வரும். இதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பிடித்தமான பொழுது போக்குகளில் ஈடுபடுங்கள். இது மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர உதவியாக இருக்கும்.


உணவு - ஆரோக்கியமான சரிவிகித உணவு மற்றும் வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.