தினமும் சமையலில் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சமையல் முறைகள் குறித்த சிறிய குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன்படி, அழுகிய தக்காளியை பயன்படுத்துவது முதல் மைதாவில் பூச்சி வராமல் இருக்கவைப்பது வரையிலான சில எளிய சமையல் டிப்ஸ்கள் உங்களுக்காக.
- தக்காளி கொஞ்சம் ஓரமாக அழுகி இருந்தால் அதை தூக்கி எறிந்து விட வேண்டாம். அந்த தக்காளியை குளிர்த்த நீரில் போட்டு சிறிது உப்பும் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு இரவு அப்படியே வைத்தால் தக்காளி நிலையான தன்மையை அடையும்.
- தோசை மாவுக்காக அரிசி ஊற வைக்கும்போது அதனுடன் சிறிது ஜவ்வரிசியும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால், தோசை மொறுமொறுப்பாக இருக்கும்.
- ஆப்பத்துக்கு மாவு கலக்கும்போது அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்தால் ஆப்பம், சீக்கிரம் காய்ந்து போகாது.
- பூரி செய்யும்போது, மாசு பிசைய தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக பால் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருக்கும்.
- பாகற்காய் கசக்கும் என்பதால் பெரும்பலானோர் அதை விரும்ப மாட்டார்கள். பாகற்காய் கசப்பு போக உப்பு, மஞ்சள், எலுமிச்சை சாறு போதும். இந்த மூன்று பொருட்களுடன் வெள்ளம் சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்தால் பாகற்காய் கசக்காது.
- பாகற்காயை 2, 3 நாட்கள் வைத்தால் பழுத்து விடும். பாகற்காய் பழுக்காமல் இருக்க, அதன் மேற்புறமும், அடிப்புறமும் வெட்டி விட்டு, இரண்டாக பிளந்து வைத்தால் எத்தனை நாள் ஆனாலும் பாகற்காய் பழுக்காது.
- கீரையுடன் பயத்தம்பருப்பு சேர்த்து கூட்டு செய்யும்போது அதனுடன் ஒரு கப் பாலை சேர்த்தால் கீரை மணமாக இருக்கும்.
- அரிசி, ரவை, மைதா வைத்திருக்கும் பாத்திரங்களில் சிறு வண்டுகள் வந்துவிடும். அதில் சிறிது வசம்பு தட்டிப்போட்டு விட்டால் அரிசி, ரவை, மைதாவில் பூச்சி, புழுக்கள் வராது.
- கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றை சமைக்க முதல் நாள் ஊறவைக்க வேண்டும். அப்படி ஊறவைக்க மறந்து விட்டால், அவற்றை எண்ணெய் இல்லாமல் நன்றாக வறுத்து எடுத்து பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்றாக வெந்து விடும்.