மலச்சிக்கல் பிரச்சனையால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உணவு முறையும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும். மலச்சிக்கல் பிரச்சனையால் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் மலம் இருகி வெளியேறுவது கடினமாகி விடும். கடினமான மலம், மலம் வெளியேறுவதில் சிரமம், மலக்குடலில் அடைப்பு இருப்பது போன்ற உணர்வு, மலக்குடலில் இருந்து மலம் முழுமையாக வெளியேறாதது போன்ற உணர்வு போன்றவை மலச்சிக்கலின் அறிகுறிகள் ஆகும். ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை, சரியான அளவு உணவுகளை உட்கொள்வது, உடல் பயிற்சிகள் மற்றும் நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் மலச்சிக்கலை தவிர்க்கலாம் என்று கூறப்படுகின்றது.
தண்ணீர் குடிப்பதன் மூலம்
நாம் நிறைய தண்ணீர் குடித்து, உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம் என கூறப்படுகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது குடல் அசவுரியங்களை நீக்கும் என சொல்லப்படுகிறது. கூல்ட்ரிங்க்ஸ் உள்ளிட்டவற்றை குடிப்பதற்கு பதிலாக பழச்சாறுகளை குடிக்கலாம். முடிந்த அளவு ஆரோக்கியமான பாணங்களை பருகி உடலலை நீரேற்றமாக வைத்துக் கொள்வது மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு.
எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம்
எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் குணமாகும் என கூறப்படுகிறது. எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் செரிமான மண்டலத்தில் நச்சுகக்கள் இருந்தால் அவற்றுடன் திறம்பட போராடும் என சொல்லப்படுகிறது. எலுமிச்சை சாறு மூலம் நச்சுகள் எளிதில் வெளியேற்றப்படுவதால் இது மலத்தை வெளியேற்ற உதவி புரியும் என சொல்லப்படுகிறது.
காபி குடிப்பதன் மூலம்
காபி குடிப்பது மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வை தரும் என சொல்லப்படுகிறது. காபியில் உள்ள காஃபின் செரிமான அமைப்பில் உள்ள தசைகளைத் தூண்டுவதால் இது எளிதில் மலம் கழிக்க உதவும் என கூறப்படுகிறது.
இஞ்சி டீ குடிப்பதன் மூலம்
இஞ்சி தேநீர் குடிப்பது மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை வழங்கும் என கூறப்படுகிறது. இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் வெப்பத்தால் மந்தமான செரிமானம் வேகமாக நடைபெறும் என கூறப்படுகிறது.
ஆமணக்கு எண்ணெய் குடிப்பதன் மூலம்
இந்த ஆமணக்கு எண்ணெய் ஒரு ட்ரைகிளிசரைடு மற்றும் சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. ஆமணக்கு எண்ணெய் குடிப்பது மலச்சிக்கலில் இருந்து பெரும் நிவாரணம் அளிக்கும். மலம் கழிப்பது எளிதாகிவிடும் என கூறப்படுகிறது.
பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.