உணவில், காய்கள், கீரைகள், பழங்கள், புரதச் சத்துக்காக அசைவ  உணவுகள் என அனைத்தையும் எடுத்து கொள்ள  ஆரம்பித்துள்ளனர்.அவர்களை  உணவை மேலும் ருசியாக்க சில சாலட் வகைகளை எடுத்து .கொள்ளலாம். சமைக்காமல் எடுத்து கொள்ளும் உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. 


வெள்ளரிக்காய், பீட்ரூட்  சாலட் - இரண்டு காய்களை  உப்பு,மஞ்சள் தூள், சுடுதண்ணீர் சேர்த்து நன்றாக  கழுவி கொள்ளவும். பின்  சிறிதாக வெட்டி இரண்டு காய்களையும் சம அளவில் ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.  அதில் தேவையான அளவு உப்பு, மிளகு தூள், சேர்த்து  எலுமிச்சை சாறு கொஞ்சம் ஆக சேர்த்து பரிமாறலாம்.


வெள்ளரிக்காய்  உடல் எடை குறைவதற்கு  உதவியாக இருக்கும். பீட்ரூட் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க உதவும்.வண்ணமயமான இந்த சால்ட் உடலுக்கு தேவையா ஊட்டச்சத்துகளை அளிக்கிறது.


கொண்டைக்கடலை மற்றும் காய்கறி சாலட் - கேரட், சிவப்பு மற்றும் பச்சை குடைமிளகாய்,  காலிஃபிளவர், கொண்டைக்கடலை, எலுமிச்சை, உப்பு, மிளகுத்தூள், எடுத்து கொள்ளவும். காலிஃபிளவர் மற்றும்  கொண்டைக்கடலை இரண்டையும் வேகவைத்து கொள்ளவும். கேரட், சிவப்பு மற்றும் பச்சை குடைமிளகாய் சிறியதாக வெட்டி ஒரு கிண்ணத்தில் போட்டு,அதில் வேகவைத்த காலிஃபிளவர் மற்றும்  கொண்டைக்கடலை சேர்த்து கலந்து கொள்ளவும். மேலே ஆலிவ் எண்ணெய், தேவையான அளவு உப்பு, மிளகு தூள் ,  சுவைக்கு ஏற்ப எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்.




 இது அதிக புரத சத்து நிறைந்த சாலட்.  உடல் எடையை சமநிலையில் வைக்க இது உதவுகிறது. தைராய்டு பிரச்னை இருப்பவர்கள், காலிஃபிளவர் தவிர்த்து மற்ற காய்களை சேர்த்து கொள்ளலாம்.


பச்சை பப்பாளி சாலட் - பச்சை பப்பாளி, கேரட், வெள்ளரி, புதினா மற்றும் உளர் பழங்கள், உப்பு, மிளகு தூள், எண்ணெய், எலுமிச்சை சாறு . பச்சை பப்பாளி, கேரட்,  வெள்ளரி  ஆகியவற்றை சிறியதாக வெட்டி, அதில் மேலே, புதினா இலைகள் , உளர் பழங்கள் சேர்த்து கொள்ளவும்.  தேவையான அளவு, உப்பு, மிளகுத்தூள், சேர்த்து சுவைக்காக எண்ணெய் , எலுமிச்சை சாறு கலத்து பரிமாறலாம்.


நார்சத்து நிறைந்த சலாட். உடல் எடை குறைப்பதற்கு உதவும். ஊட்டச்சத்து நிறைந்த சால்ட் இது.


ராஜ்மா சலாட் - ராஜ்மா வை வேகவைத்து கொள்ளவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, முட்டைக்கோஸ், அக்ரூட் பருப்பு, வேகவைத்த வேர்க்கடலை ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு மிளகுத்தூள், சுவைக்கு ஏற்ப எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.


புரத சத்து நிறைந்த சால்ட். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்து கொள்ளலாம். மிக எளிமையான செய்முறை உடன் காலை  சாலட் இது. உடல் எடை குறைபவர்கள் இதை ஒரு நேர உணவாக எடுத்து கொள்ளலாம்