இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரமலான் (Ramadan Month) தொடங்கியது. இந்தியாவில் நாளை (12.03.2024) முதல் ரமலான் மாத நோன்பு கடைப்பிடிப்பது தொடங்கப்பட உள்ளது.


ரம்ஜான் பண்டிகை:


இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள், இந்த மாதத்தில் அதிகாலை  சூரிய உதயத்திற்கு முன் எழுந்து இறைவனை தொழுது நோன்பை தொடங்குவார்கள். சூரிய அஸ்தமனத்திற்கு பின், நோன்பை முடிப்பார்கள். சூரிய உதயத்திற்கு முன்பே உணவு உட்கொண்டு சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சாப்பிட்டு நோன்பை கடைபிடிப்பார்கள்.


நோன்பு திறப்பதை இப்தார் என்று அழைப்பர். நோன்பு இருக்கும் முப்பது நாட்களும் தினசரி ஐந்து முறை தொழுகை செய்து இறைவனை வழிபடுவர். ரமலான் மாதத்தை  இறைவனின் அருள் பெரும் மாதம் என்று நம்பப்படுகிறது. ரம்ஜான் மற்றும் ரமலான் என்றப் பெயர்களால் இந்த பண்டிகை அழைக்கப்படுகிறது.


நோன்பு பிற்ற வேண்டுமா?


கலிமா (இறைவனை நம்புதல்), தொழுகை (இறைவனை வழிபடுதல் ), சகாத் (ஏழை எளியோருக்குக் கொடுத்தல்), ஹஜ்ஜு (புனிதப் பயணம்), ரமலான் நோம்பு (நோம்பு) என்ற  ஐந்து அடிப்படைக் கடமைகளைக் கொண்டுள்ளது இஸ்லாம். ரமலான் மாத நோன்பு காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என  அனைவரும் நோன்பு மேற்கொள்வார்கள். 


கர்ப்பமாக இருக்கும் பெண்கள், மாதவிடாய் சுழற்சி காலம், உடல்நல சிக்கல்கள் உள்ளவர்கள், பயணம் மேற்கொள்பவர்கள், உடல்நல சிக்கல்களுக்காக சிகிச்சை எடுப்பவர்கள், உடல்நலன் சரியில்லாதவர்கள் ஆகியோர் ரம்லான் மாதத்தில் நோன்பு பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சொல்லப்படுகிறது.


நோன்பு காலம்


30 நாள்கள் ரமலான் நோன்பு காலம். பிறை தெரிந்ததும் நோன்பு காலம் தொடங்கிறது. அதன்படி, இந்தாண்டு மார்ச் 12-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைகிறது. ஒரு மாதம் முழுவதும் நோன்பு வைத்து, இறைவனை வணங்கி, பசியை உணர்ந்து, ஏழைகளுக்கு `பித்ரா’ என்றழைக்கப்படும் கட்டாய தானத்தை அளித்த பிறகும், பெருநாளின் சிறப்புத் தொழுகை தொழுவதே நோன்புப் பெருநாளைச் சரியாக கடைப்பிடிக்கும் முறை என்று சொல்லப்படுகிறது. ஏப்ரல் 10-ம் தேதி ஈகைப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.


நோன்பு இருப்பவர்கள் உடல் அளவில் மட்டும் அல்லாமல் மனதளவில் நோன்பிறகு தயராக வேண்டும். இந்த  ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோம்பு இருப்பது மட்டும் அல்லாமல்  உலக  இச்சைகளைத் தவிர்க்க வேண்டும்; நோன்பு இருப்பதுடன் நமது கடமை முடிந்து விடுகிறது என்று நினைக்காமல் தினசரி திருக்குர்ஆன் வாசித்தல் முடிந்தவரை இந்த காலத்தில் ஏழை எளியோருக்கு உணவு வழங்குகள், முடிந்த அளவிலான உதவிகளை செய்தல் போன்றவற்றை செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தில் சொல்லும் நெறிமுறையாக சொல்லப்படுகிறது. 


நோன்பு காலத்தில் காலையில் குளித்துவிட்டு, தொழுகை செய்ய வேண்டும். அதோடு, ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ள வேண்டும். மாலை நோன்பு முடித்து உணவு சாப்பிடுவது, தவறாமல் தொழுகை செய்து இறைவனை நினைத்து வழிபட வேண்டும் உள்ளிட்டவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும். தீய எண்ணங்களை விடுத்து நல்ல எண்ணங்களுடன் மட்டும் இறைவனை தொழுது மற்றவர்களுக்கு உதவுவதால் மட்டுமே ரமலான் நோன்பு காலம் முழுமை பெறும் என்று நம்பப்படுகிறது.. 


இந்தியாவில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. சவுதி அரேபியால் நேற்றைக்கே  பிறை நிலா தெரிந்ததால் ரமலான் நோன்பு தொடங்கியது. இந்தியாவில் இன்னும் பிறை தெரியவில்லை; இன்றோ, நாளையோ நோன்பு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.