காதலர் தின வாரத்தின் இரண்டாம் நாளான ஒன்று ப்ரோபோஸ் டே (Propose Day)இன்று கொண்டாடப்படும் நிலையில் மீம் கிரியேட்டர்களும் தங்கள் கைவண்ணத்தை காட்ட தவறுவதே இல்லை.
பிப்ரவரி 14 ஆம் தேதி தான் காதலர் தினம் என்றாலும் ஒரு வாரம் முன்னதாகவே காதலர் தினத்திற்கான கொண்டாட்டங்கள் தொடங்கி விடும். வருடம் 365 நாட்கள் காதலர்களுக்கு இடையே அன்பு இருந்தாலும், காதலர் தின வாரம் என்பது எப்போதும் ஸ்பெஷல் தான். அந்த வகையில் நேற்று Rose Day கொண்டாடப்பட்ட நிலையில், இன்று ப்ரோபோஸ் டே (Propose Day) கொண்டாடப்படுகிறது. எப்படியெல்லாம் காதலை சொல்லலாம் என காதலர்கள் நினைத்துக் கொண்டிருக்க, மறுபக்கம் மீம் கிரியேட்டர்கள் தங்கள் கைவண்ணத்தை மீம்ஸ்களாக காட்டி வருகின்றனர்.
எப்படியெல்லாம் காதலிக்கலாம் என யோசிப்பவர்கள், காதலை சொல்லும் போது பல நேரங்களில் சொதப்புவது உண்டு. சினிமா, கதைகளில் வருவது போல இப்படியெல்லாம் காதலை சொல்லலாம் என நினைத்து கடைசியில் நினைத்தது ஒன்று.. நடந்தது ஒன்று.. கதை தான். அப்படி உங்கள் வாழ்க்கையில் நடந்திருந்தால் கவலையை விடுங்கள். இந்த ப்ரோபோஸ் டேவில் உங்கள் காதலன்/ காதலியை கிஃப்ட் அல்லது அவர்களுக்கு /உங்களுக்கு பிடித்த முறையில் காதலை வெளிப்படுத்துங்கள். அதேசமயம் புதிதாக காதலிக்க நினைப்பவர்கள் இன்றே நீங்கள் விரும்பும் நபரிடம் காதலை தெரிவியுங்கள்.
இதற்கிடையில் காதலை சொல்லி ஜெயித்தவர்களும் சரி, காதலை சொல்லி நிராகரிக்கப்பட்டவர்களும் சரி, இன்னும் காதலிக்காமல் இருப்பவர்களுக்கும் என அனைத்து தரப்பினரையும் மீம்ஸ்கள் மகிழ்ச்சிக்குள்ளாக்கும். நிச்சயம் அவர்களின் கற்பனை வளத்தை பாராட்டி தான் ஆக வேண்டும். அந்த அளவுக்கு எவ்வளவு கடினமான சூழலில் இருந்தாலும் மீம், போட்டோக்கள், வீடியோக்கள் நம் இறுக்கமான சூழலை மாற்றி விடும்.
இதனிடையே ப்ரோபோஸ் டே (Propose Day) வந்த காலத்துக்கும் நிலைக்ககூடிய மீம்ஸ்கள் சிலவற்றை நாம் காணலாம்.