பெண்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சட்னியை  அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது மாதவிடாய் பிரச்சனையில் இருந்து சிறந்த தீர்வளிக்கிறது. இந்த எள்ளு வேர்க்கடலை சட்னி பருவ வயது பெண்கள் முதல் வயதானோர் வரை அனைவரும் எடுத்து கொள்ளலாம்.

எள்ளு வேர்க்கடலை சட்னி செய்ய தேவையான பொருள்கள்

எள்ளு - 2 டீஸ்பூன்

வேர்க்கடலை - 1/2 கப்

காய்ந்த மிளகாய்  - 3

தேங்காய் துருவல்  -2  டீஸ்பூன்

புளி  -சிறிதளவு     

உப்பு  - தேவையான அளவு

எண்ணெய்  - ஒரு டீஸ்பூன்

கடுகு  - கால் டீஸ்பூன்

கருவேப்பிலை  - சிறிதளவு

செய்முறை

  • எள்ளு மற்றும் வேர்க்கடலை இரண்டையும் தனியாக வறுத்து வைத்து கொள்ளவும். வேர்க்கடலையின் தோலை நீக்கி விட வேண்டும்.
  • இவற்றுடன் காய்ந்த மிளகாயும் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  • வறுத்த எள்ளு, வேர்க்கடலை, மற்றும் காய்ந்த மிளகாய், புளி, தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி பரிமாறவும்.
  • சுவையான எள்ளு வேர்க்கடலை சட்னி தயார்

பயன்கள்

எள்ளு மற்றும் வேர்க்கடலை  இரண்டும் சேர்த்து புரத சத்து மிக்கது.

பெண்களுக்கு இடுப்பெலும்பு பலம்பெறவும், ஆரோக்கியமாக இருக்கவும் இதை எடுத்து கொள்ளலாம்.

பருவ வயதில் இருக்கும் பெண்கள், மாதவிடாய் ஆரம்பிக்கும் நாட்களில் அடிக்கடி இதை உணவில் சேர்த்து கொள்வதால், மாத விடாய் சுழற்சி சீராக இருக்கும்.

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வராமல் இருக்கும் பெண்களுக்கு இதை உணவில் சேர்த்து கொள்வதால், ஹார்மோன் சுரப்பு சீராகி எந்த வலியும் இல்லாமல் மாதவிடாய் நாட்கள் ஈஸியாக இருக்கும்.

இரத்த போக்கு சரியாக இல்லையென்றாலும் இதை எடுத்து கொள்ளலாம்..

இது இரும்பு சத்து மிக்க உணவாகும். இரத்த சோகை , ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக இருக்கிறது.

உடலுக்கு தேவையான புரத சத்து இதில் இருந்து கிடைக்கிறது.

வேர்க்கடலை சாப்பிட புடிக்காதவர்களுக்கு இது  போன்று சட்னி செய்து, இட்லி, தோசையுடன் இதை சேர்த்து கொள்ளலாம்.

பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடுகளை சீராக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

இது  உடலில் சேரும் கெட்ட கொழுப்பு அளவை குறைக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது.