90ஸ் கிட்ஸ்களின் பிடித்த ஸ்னாக்ஸ் கடலை மிட்டாய். இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இருக்கிறது. கடலை மிட்டாய் சாப்பிடுவதால், வயிறு நிறைவாகவும், ஊட்டசத்துடனும் இருக்கும். இந்த கடலை மிட்டாய் வீட்டிலே சுவையாக செய்து சாப்பிடலாம்.


                               


கடலை மிட்டாய் செய்வதற்கு தேவையான பொருள்கள்


கடலை மிட்டாய் - 1 கப்


வெல்லம் - 1/2 கப்


நெய் - 2 டீஸ்பூன்


தண்ணீர் - 1/2 டம்ளர்




செய்முறை -



  • நிலக்கடலையை மிதமான வெப்பத்தில் வறுத்து கொள்ளவும். வறுத்த கடலையை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

  • ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து வெல்லப்பாகு தயாரிக்கவும்.

  • வெல்லப்பாகு பதம் வந்தவுடன், அதனுடன் அரைத்து வாய்த்த நிலக்கடலை சேர்த்து கொள்ளவும்.

  • ஒரு தட்டில் கொஞ்சம் நெய் தடவி அதில் வேர்க்கடலை பரப்பி விடவும்.

  • பிறகு ஒரு கத்தியால் சிறிது சிறிதாக வெட்டவும். கடலை மிட்டாய் தயார்.

  • வீட்டில் செய்த சுவையான கடலை மிட்டாய் தயார்.


இந்த கடலை மிட்டாய் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். இது ஊட்டச்சத்து மிக்கது. இதில் வைட்டமின் இ , புரத சத்து, இரும்பு சத்து, அளவான கொழுப்பு சத்து, போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது.




இதை எடுத்து கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்



  • இது குறைவான கலோரிகள் கொண்ட இதை உடல் பருமன் இருப்பவர்கள் எடுத்து கொள்ளலாம்.

  • குழந்தைகள் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.

  • இரும்பு சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் கடலை மிட்டாய் எடுத்து கொள்ளலாம்.

  • இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைகிறது.

  • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

  • பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

  • இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது.

  • அதிக புரத சத்து மிக்கது. வலுவான தசைகளுக்கும், எலும்புகள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

  • மூளை செயல்திறனை மேம்படுத்துகிறது.

  • தோல் புத்துணர்ச்சிக்கும், தோல் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது.

  • பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி பிரச்சனை இருப்பவர்கள் இதை தொடர்ந்து எடுத்து கொள்ளலாம்.

  • இது ஹார்மோன் குறைபாடுகள் இருப்பவர்கள் சாப்பிடலாம்.




90 கிட்ஸ் விரும்பி சாப்பிட இந்த கடலை மிட்டாயில் இத்தனை நன்மைகள் இருக்கிறது.  அனைத்து வயதினரும் இதை சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். தினம் 1 அல்லது 2 கடலை மிட்டாய் எடுத்து கொள்ளலாம்.