நம் அன்றாட உணவுமுறை உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ’என்ன உணவு உண்கிறோமோ அதுதான் நாம்’. அது அவ்வளவு உண்மை. மாறிவரும் சூழலுக்குக்கேற்ப நம் டயட்டில் பல உணவுகள் இணைந்துவிட்டன. அது ஆரோக்கியமுடன் இருந்தால் சரிதான். அப்படி, நாம் இன்று அதிகமாக பழகிவருவது என்றால், ஹெர்பல் டீ. ஆமாம், இப்போது ஹெர்பல் டீ என்பது மிகவும் பிரபலமாக உள்ளது. 


ஹெர்பல் டீ பி.சி.ஓ.எஸ்., பாதிப்பில் இருந்து மீளவும், அதன் விளைவுகளில் இருந்து தப்பிப்பதற்கும் எவ்வாறு உதவுகிறது என்பது பற்றி ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, உடலில் ஹார்மோன் சீரின்மையால் ஏற்படும் மாற்றங்களை உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் சரிசெய்யலாம். அதற்கு ஹெர்பல் டீ-யும் நன்கு உதவும். 


பி.சி.ஓ.எஸ்.- ஐ எளிதாக வெல்வதற்கு ஹெர்பல் டீ சிறப்பாக உதவும்.


புதினா டீ- Spearmint Tea:



புதினா டீ பி.சி.ஓ.எஸ். ஆல் ஏற்படும் ஹார்மோன் சீரற்றதன்மையை குறைக்க உதவுகிறது. இளஞ்சூட்டில் தினமும் புதினா டீ குடிப்பது நல்லது.  இதோடு எலும்பிச்சை பழச் சாறும் சேர்த்து குடிக்கலாம். 


 



கிரீன் டீ:


உடலில் உள்ள இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக்கொள்ள இந்த கிரீன் டீ சிறந்த சாய்ஸ். இதில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்ட் தன்மை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. பி.சி.ஓ.எஸ்., அறிகுறிகள் இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க கிரீன் டீ-யை டயட்டில் சேர்ப்பது நல்ல பலன் தரும். 


 






இஞ்சி டீ:


சமையலில் இஞ்சி பொதுவாக நாம் செரிமானத்தை தூண்டுவதற்காக அதிகமாக பயன்படுத்துவோம். பி.சி.ஓ.எஸ்., காரணமாக உடலில் குறையும் ஈஸ்டோரெஜன் அளவை சீராக்க இந்த இஞ்சி டீ உதவுகிறது.  இதில் உள்ள ஆன்டி- இன்ஃபேலேமேட்ரி திறன் உடல் வலி, தலைவலி உள்ளிட்டவைகள் வராமல் தடுக்கிறது. காலை அல்லது மாலை என எப்போது வேண்டுமாலும் இஞ்சி டீ குடிக்கலாம். இதோடு எலும்பிச்சை மற்றும் தேன் கலந்தும் குடிக்கலாம். 











அதிமதுரம் டீ:


 




அதிமதுரத்தில் பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அது பி.சி.ஓ.எஸ்.-க்கு எப்படி உதவுகிறது என்றால், உடலில் டெஸ்டோரெசன் அளவை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. மேலும், அதிமதுர டீ குடிப்பதால், எதாவது இனிப்பாக சாப்பிட வேண்டும் என்ற ஆசைக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த டீயை தவிர்க்கலாம். 


லவங்க பட்டை டீ: 


 



லவங்கப்பட்டை டீ, இரத்தத்தில் அதிகளவு சர்க்கரை சேர்வதை குறைக்கிறது. இது குறைந்த கலோரி என்பதாலும், தினமும் இரண்டு முறை இந்த டீ குடிக்கலாம்.