புத்தாண்டு கொண்டாட்டம் என்பது நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒன்று மற்றும் நாம் அனைவரும் நம் குடும்ப நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களுடன் ஆண்டின் இந்த நேரத்தைச் செலவிட விரும்புவோம். விடுமுறைக் காலங்கள் ஆண்டின் சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விடுமுறையைச் செலவிடும் அதே நேரம் அவர்களுடனான எல்லைகளை வரையறுத்துக் கொள்வதும் முக்கியம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்டின் இந்த நேரத்தில் சுற்றத்தாருடன் பழகுவதற்குக் கொஞ்சம் கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது. அதனால்தான் நம் விடுமுறைக்கால குதுகல மனநிலையை மன அழுத்தம் வெல்ல விடாமல் நமக்கான எல்லைகளை வரையறுப்பது மது மன ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
1. முன்னுரிமை கொடுப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்
சில நேரங்களில், முன்னுரிமை கொடுப்பது நாம் எதிர்பார்ப்பது போல் இதுவல்லது அது என இருப்பதில்லை. குறிப்பாக 10 உருப்படிகள் நிலுவையில் இருக்கும்போது, அவை அனைத்தும் முடிக்கப்பட வேண்டும், ஆனால் அதில் விரைவில் உங்கள் கவனம் எதற்குத் தேவை என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். உங்களுக்காக நேரம் ஒதுக்கவும், என்ன நடக்கிறது மற்றும் நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதை அறிந்து செயல்படுத்தவும். எல்லாமும் நமக்கானது அல்ல என்பதை உணர்ந்து செயல்படவும்.
2. உணர்ச்சிகளைப் புரிந்து கவனமாக இருங்கள்
உறவுகளை சீர்செய்து பராமரிக்கும் குறிக்கோளுடன் எல்லைகளை அமைப்பதே உங்கள் இலக்கு என்று முடிவு செய்யுங்கள். அதற்கு முதற்கட்டமாக அவர்களுடன் உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கு முன் தேவையான நேரத்தை எடுத்துக்கொள்வது சரியான வகையிலான தகவல்தொடர்புக்கு பயனுள்ளதாக இருக்கும். இது உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை மையப்படுத்தி இயங்கவும் மேலும் திறம்பட தொடர்புகொள்ளவும் உதவும்.
3. யதார்த்தமாக இருங்கள்
கடந்த ஆண்டு கொரோனா பேரிடர் பல பார்டிகளுக்கு பந்த் போட்டதால் இந்த ஆண்டு அதனை சமன் செய்யும் வகையில் எல்லா பார்ட்டிகளிலும் பங்கேற்க வேண்டும் என்கிற முடிவில் இருப்போம். பல பார்ட்டி அழைப்புகளை ஏற்றுக்கொள்வது அல்லது நாமே முந்திக்கொண்டு முன்பதிவு செய்துகொள்வது சோர்வு அல்லது அதிகப்படியான அயற்சிக்கு வழிவகுக்கும். அதனால் சூழலைப் புரிந்து அதற்கேற்றபடி தேர்வு செய்யுங்கள்.
4. ஒரு 'முடிவு' நேரத்தை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்
பார்ட்டிகள் அதிகாலை வரை நீடிக்க வேண்டியதில்லை. நீங்கள் ஹோஸ்ட் செய்கிறீர்கள் என்றால், எந்த நேரத்தில் பார்ட்டியை முடிக்க விரும்புகிறீர்கள் என்பதை உங்கள் விருந்தினர்கள் முன்கூட்டியே தெரியப்படுத்துங்கள். நீங்கள் ஹோஸ்டிங் செய்யவில்லை என்றால், மற்றவர்களுக்கு முன்பாக வெளியேறுவதைப் பற்றி வருத்தப்பட வேண்டாம். உங்கள் ஓய்வும் மன அமைதியும் மிக முக்கியம்.
5. ஒரு சமயத்தில் ஒருவருடன் மட்டுமே பேசுங்கள்
நம் நண்பர்களின் உற்சாகத்தில் மூழ்கிடும்போது நம்மை நாமே மறந்துவிடுவது எளிது. ஒருவரின் நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்வதற்கும் நேரம் போதாமைக்கும் இடையே பெரிய அளவிலான மாறுபாடு உண்டு. நீங்கள் விடுமுறை நாட்களில் உங்களையும் மீறி அதிக நேரத்தை நண்பர்களுக்காகச் செலவிடலாம்.ஆனால் அதற்கெல்லாம் உங்கள் உடலும் ஒத்துழைக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.