தற்போதைய காலக்கட்டத்தில் மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளை எளிதாகவும் சிக்கிரமாக இயந்திரமே செய்து முடித்து விடுகிறது. குறிப்பாக வாஷிங் மெஷின் என்பது இன்றைய வீட்டுத் தேவைகளில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. கைகளில் துணிகளைத் துவைக்கும் சிரமத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த இது பெரிதும் உதவுகிறது. எவ்வளவு துணியாக இருந்தாலும் எந்த அலைச்சல் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் துணியை எளிதாக துவைப்பது மட்டுமல்லாமல் துணியை காயவைத்து கொடுத்து விடுகிறது. ஆனால், வாஷிங் மெஷினில் எல்லா வகையான துணிகளையும் துவைக்க கூடாது. அப்படி துவைத்தால் துணிகள் விரைவில் கிழிவதோடு, நிறங்கள் மங்குவதும், சோப்பு படிமங்கள் படிவதும் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எந்தெந்த மாதிரியான துணிகளை வாஷிங் மெஷினில் துவைக்க கூடாது என்பதை பார்க்கலாம்.
இதையும் படிங்க: Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
கம்பளி ஆடைகள்
கம்பளி ஆடைகள் ரொம்ப மென்மையானது என்பதால் அவற்றை ஒருபோதும் வாஷிங் மெஷினில் போட்டு துவைக்க கூடாது. இல்லையெனில் அவை சேதமடையக் கூடும். எனவே அவற்றை கைகளால் லேசாக சோப்பு போட்டு துவைக்க வேண்டும்.
ரெயின்கோட்
ரெயின் கோட் வாட்டர் ப்ரூப் என்பதால் அதை வாஷிங் மிஷினில் போட்டு துவைப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் ரெயின் கோட் பலூன் போல் விரிவடைந்து விடும். அதுமட்டுமின்றி ரெயின் கோட் கிழிந்து விடும். இது தவிர வாஷிங் மெஷின் பழுதடைந்து உங்களுக்கு செலவு வைத்துவிடும்.
சிப்பி முத்து ஆடைகள்
வாஷிங் மெஷினில் சிப்பி மற்றும் முத்துக்கள் பதித்த ஆடைகளை துவைப்பதை தவிர்க்க வேண்டும். அவற்றை வாஷிங் மெஷினில் துவைக்கும் போது அவைகள் உடைந்து, ஆடையில் நூல் நூலாக வர ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி வாஷிங் மெஷினும் பழுதடைந்து விடும்.
இதையும் படிங்க: Sugar Cut: ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுதினால்...! உடலில் ஏற்படும் முக்கிய 5 மாற்றங்கள் என்ன?
எண்ணெய் ஆல்கஹால் கறை ஆடைகள்
சமையல் எண்ணெய், பெட்ரோல், ஆல்கஹால், மோட்டார் கறை போன்ற கறைகள் உள்ள துணிகளை ஒருபோதும் வாஷிங் மெஷினில் போட்டு துவைக்க கூடாது. இல்லையெனில் வாஷிங் மெஷினில் தீ பற்றக் கூடும்.
ஆடம்பரமான ப்ரா
வாஷிங் மெஷினில் மிக விலை உயர்ந்த ஆடம்பரமான மற்றும் சருகை அல்லது பேக் செய்யப்பட்ட ப்ராக்களை ஒருபோதும் துவைக்க கூடாது. அதுவும் குறிப்பாக, அண்டர்வயருடன் இருக்கும் ப்ராவை துவைக்கவே கூடாது.
ஜரிகை ஆடைகள்
ஜரிகை அடுக்குகள் மென்மையானது என்பதால் அவற்றை வாஷிங் மிஷினில் போட்டு துவைக்க கூடாது. இல்லையெனில் அவை சேதம் அடைந்துவிடும். எனவே அவற்றை கைகளால் துவைப்பதே சிறந்தது.
