Navratri 2024: பண்டிகை காலத்தில் ஆரோக்கியத்தை பாதுகாக்க.. நிபுணர்கள் சொல்லும் சில டீடாக்ஸ் வழிகள்!

Navratri 2024: நவராத்திரி விழா கொண்டாட்ட நேரத்தில் டீடாக்ஸ் செய்ய உதவும் வழிமுறைகள் பற்றி இங்கே காணலாம்.

Continues below advertisement

நவராத்திரி விழா, ஆயுத பூஜை, தீபாவளி என பண்டைகை காலம் என்பதால் வீடுகளில் இனிப்பு, பல வகை உணவுகள், அன்பு பரிமாற்றம் என இருக்கும்.

Continues below advertisement

சிறப்பு வழிபாடு, பூஜை, தினமும் சிறப்பு உணவுகள் என அன்பிற்குரியர்களுடனான அன்பு, உணவு பகிர்தல் என நீளும். அப்படியிருக்கையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவதிலும் கவனம் செலுத்த வேண்டும். தொடர்ந்து அதிகமாக சாப்பிடுவதாக உங்களுக்கு தோன்றினால், டீடாக்ஸ் செய்ய சில வழிமுறைகளை ஊட்டச்சத்து நிபுணர் அக்‌ஷயா தெரிவிக்கிறார். 

டீடாக்ஸ் தண்ணீர்:

உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது டீடாக்ஸ் செய்ய சிறந்த முறையாக சொல்லப்படுகிறது. தினமும் 8-10 டம்பளர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதில் எலுமிச்சை பழம், வெள்ளரிக்காய், சியா விதைகள், சப்ஜா விதைகள், ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து குடிப்பது நல்லது. இது செரிமான திறனை மேம்படுத்தும். 

ஓமம், சீரகம் உள்ளிட்டற்றையும் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி அருந்தலாம். 

பழங்கள்:

பழங்கள், வேகவைக்காமல் சாப்பிட கூடிய காய்கறிகள் சாப்பிடலாம். சாதம் இனிப்பு வகைகளை குறைவாக சாப்பிடலாம். கீரை, கேல் கீரை, ப்ரோக்கோலி, ஸ்வீட்கான் உள்ளிட்ட நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.தயிர் சாப்பிடலாம். 

சர்க்கரை வேண்டாமே:

சர்க்கரை நிறைந்த உணவுகள், பாக்கெட்களில் அடைத்த உணவுகளை சாப்பிட வேண்டாம். டீடாக்ஸ் உணவுகள் சாப்பிடும்போது இதை தவிர்ப்பது நல்லது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:

நார்ச்சத்து நிறைந்த உணவுகளான ஓட்ஸ், சியா விதைகள், பீன்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிடுவது செரிமான திறனை மேம்படுத்தும். செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற தேவையானதை மட்டும் சாப்பிடவும்.

உடற்பயிற்சி:

உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். யோகா, நடைப்பயிற்சி என 30 நிமிடங்கள் செய்யலாம்.

நெல்லிக்காய் ஜூஸ்:

நெல்லிக்காயில் அதிகளவில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. மேலும் நெல்லியில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், செரிமானப்பிரச்சனைக்குத் தீர்வாக உள்ளது. இதோடு உடல் எடைக்குறைப்பதற்கும் உதவுகிறது. எனவே உங்களது உடல் ஆரோக்கியத்திற்கு இனி மேல் தினமும் காலை வேளையில் நெல்லிக்காய்களை எடுத்து ஜூஸ் செய்து சாப்பிடலாம்.

தேன் எலுமிச்சை இஞ்சி டீ: சூடான இஞ்சி டீயில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்துச்சாப்பிடலாம்.  இந்த பானத்தைப் பருகுவதன் மூலம் உடலில் உள்ள தேவையில்ல கொழுப்புகள் குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்

 

பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.

Continues below advertisement
Sponsored Links by Taboola