இந்தியாவின் பன்முகத்தன்மை, காலாச்சார, பாரம்பரியம்,  சுற்றுலா நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும்வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. 


இந்தியாவில் உள்ள பாரம்பரியமிக்க இடங்கள் உலக அளவில் பிரபலமானவை. சுற்றுலா துறையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 1948-ம் ஆண்டு முதல் ‘தேசிய சுற்றுலா தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு சுற்றுலா துறையின் பங்களிப்பு, அது சார்ந்து இயக்கும் மனிதர்களின் பங்களிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நாளாகவும் இந்த நாள் இருக்கிறது.  


Sustainable Journeys, Timeless Memories,' என்பதே இந்தாண்டிற்கான கருப்பொருள். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது சுற்றுலா துறை. சுற்றுலா ஸ்தலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விற்பனையை மத்திய அரசு ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் வணிகளின் உழைப்பை அங்கீகரித்து அவர்களின் விற்பனைக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை இந்தநாளில் அறிவுறுத்தப்படுகிறது. சுற்றுலா துறையின் முக்கியத்துவதும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ‘தேசிய சுற்றுலா தினம்’ கொண்டாடப்படுகிறது.


உழைப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு ஓய்வும் அவசியமாகும். உலகம் முழுவதும் சுற்றி திரிந்து புது இடங்களை காண வேண்டும் என்ற ஆசை யாருக்கு இல்லாமல் இருக்கும். சுற்றுலா செல்வது புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். அதிக விடுப்பு கிடைக்காதவர்கள் ஒரு நாள் சுற்றுலா செல்லலாம். நீங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளை நாம் அதிகமாக கவனித்திருக்க மாட்டோம் இல்லையா. அன்றாட வேலைப் பளு, ரொட்டீன் ஆகியவற்றில் இருந்து ஒரு ப்ரேக் எடுத்து ஏதாவது ஒரு இடத்திற்கு சென்று வரலாம். குடும்பத்துடன், நண்பர்களுடன் சுற்றுலா சென்றால் அந்த நாளே அழகாக இருக்கும். திட்டமிடுதலும் முக்கியம்.


திட்டமிடுதல் முன் கவனிக்க வேண்டிவை



  • சுற்றுலா திட்டமிடுவதற்கு முன், யாருடன் செல்கிறீர்களோ அவர்களுக்கு விடுப்பு எடுக்க முடியுமா என தேதி குறித்து ஆலோசனை செய்வது முக்கியம்.

  • பயணம் செல்லும் இடத்தை முடிவெடுத்து அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

  • டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பிரத்யேக சலுகைகள் ஏதும் இருக்கா என்பது குறித்து கவனிங்க.

  • தங்குமிடம், அது தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சுற்றுலாவுக்கு செல்லும் அனைவரின் வசதிக்கு ஏற்றவாறு தங்குமிடம் குறித்து முடிவெடுக்கலாம்.

  • சுற்றுலா செல்லும் இடங்களில் என்னென்ன உள்ளூர் உணவுகளை ருசிக்கலாம் என்பது குறித்தும் திட்டமிடுவது நல்லது.

  • சுற்றுலா செல்லும் ஊர்களில் தெரிந்தவர்கள்/ நண்பர்கள்/ உறவினர்கள் இருந்தால் அவர்களின் வீடுகளின் தங்க முயற்சி செய்யலாம்.

  • கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் பயன்படுத்தினால் ரிவார்ட் கிடைக்கும். அதையும் கவனிங்க. அதோடு, சுற்றுலா செல்லும்போது பணம் கையில் வைத்திருப்பது நல்லது.

  • தேவையான உடைகளை மட்டும் எடுத்துச்செல்லவும். அதிகமானால் லக்கேஜ் எடை அதிகமாக இருக்கும்.

  • உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்றாற்போல உணவினை சாப்பிடலாம். உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தில் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டாம்.

  • உங்களுடைய பெயர், முகவரி, உங்களை தொடர்புகொள்ள வேண்டிய எண் உள்ளிட்டவற்றை ஒரு நோட்புக்கில் குறித்து சுற்றுலா செல்லும்போது வைத்துகொள்ளலாம்.