மிகப்பெரிய அளவில் நவீன வளர்ச்சி அடைந்து இருக்கும், மருத்துவ துறையில், பல விதமான கட்டுக்கதைகள் சேர்த்து வருகிறது. பரிசோதனைகள் சிகிச்சைகள், மருத்துங்கள் பற்றிய கதைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இது தவிர்க்க முடியாததாக மாறிக்கொண்டே இருக்கிறது. மார்பக புற்றுநோய் பற்றியும் பல்வேறு கதைகள் வந்து கொண்டே இருக்கிறது. சில கதைகளையும் அதன் விளக்கங்களையும் தெரிந்து கொள்வோம்.
- அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது முற்றிலும் தவறான ஒன்று. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியாக சிகிச்சை அளிக்க படுகிறது. நோயாளியின் உடல் நிலை, புற்றுநோயின் தீவிரம் என அனைத்தும் பரிசோதித்து, மருத்துவர் நோயாளிக்கான சிகிச்சையை பரிந்துரை செய்வார். ஆனால் ஒரே மாதிரியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற கட்டுக்கதை பரவி வருகிறது.
- அனைத்து மார்பக புற்றுநோய்க்கும் கீமோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது
அனைவருக்கும் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. புற்றுநோயின் தீவிரம் மற்றும் படிநிலைகள் வைத்து கீமோ தெரபி பரிந்துரைக்கப்படுகிறது. புற்றுநோயின் படிநிலையை தீவிரமாக கண்காணித்து அதன் படிநிலைகள், புற்றுநோய் கட்டிகள் பரவும் விதம் குறித்து கீமோ தெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மீண்டும் இந்த புற்றுநோய் கட்டிகள் பரவாமல் தடுக்கும் விதமாக கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. படிநிலைகள் சார்ந்து அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகிறது.
- பயாப்ஸி அல்லது அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் புற்றுநோய் கட்டிகள் பரவுகிறது.
பயாப்ஸி அல்லது அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் பரவுவதாக சில நோயாளிகள் விழிப்புணர்வு இல்லாமல் பரப்பி வருகின்றனர். ஆனால் இது உண்மை இல்லை. பயாப்ஸி சிகிச்சை என்பது புற்றுநோயின் முதல் படியை கண்டறியும் சிகிச்சை முறை ஆகும்.சிகிச்சையின் அடுத்த என்ன என்பதை உறுதி செய்வதற்கான ஒரு முறையாகும். அறுவை சிகிச்சை செய்யவேண்டுமா கீமோதெரபி செய்ய வேண்டுமா என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதனால் புற்றுநோய் பரவாது.
- மாற்று சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள் மூலம் மார்பக புற்றுநோயை குணப்படுத்த முடியும்.
மாற்று மருத்துவ முறைகள் மற்றும் மருந்துகள், சிகிச்சைகள் மூலம் புற்றுநோய் முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதற்கான எந்த சான்றுகளும் இல்லை. மாற்று மருந்துகள் மூலம் புற்றுநோய் குணப்படுத்த முடியும் என்ற எந்த மருத்துவ ஆராய்ச்சியும் , சான்றுகளும் இல்லை. அதனால் இதற்காக அதிகப்படியான பணத்தை செலவழிக்கவேண்டாம். இயற்கையான முறையில் புற்றுநோய் வராமல் தடுக்க சில வாழ்வியல் முறை மாற்றங்களை அடுத்த கட்டுரையில் பாப்போம்.