ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை, அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதுபோல இந்த வருடம் மே 8 ஆம் தேதி ஆன இன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நமக்காக வாழும் உயிருக்கு நாம் ஒரே ஒரு நாள் மட்டும் வாழ்த்து சொல்வதும், கொண்டாடுவதும் சேய் இல்லைதான் என்றாலும், இன்றொரு நாளை, அவளுக்காக, அவளுக்கு மட்டுமே ஆனதாக மாற்றுவோம். அதற்காக அன்னையை போற்றுவோம்.


அன்னையர் தினத்தை இன்று மக்கள் வித விதமாக கொண்டாடி வருகிறார்கள். அதிலும் சமூக வலைத்தளங்கள் வந்தது முதல் அதற்காக அன்னையர் தினத்தை பிரத்யேகமாக கொண்டாடுவோர் கூட்டம் கூடி விட்டது. வாட்ஸ்அப்பில், பேஸ்புக்கில், ட்விட்டரில், இன்ஸ்டாகிராமில் நாம் அன்னையர் தின பகிர்வை வெளியிட அழகான புகைப்படங்கள், சொற்றொடர்கள், மெசேஜ் அனுப்புவதற்காக உங்களுக்காக தொகுத்துள்ளோம், இதனை பயன்படுத்தி அன்னையர் தினத்திற்கு அம்மாவுக்கு சிறப்பாக வாழ்த்துக்கள் கூறுங்கள்…


வாழ்த்து ஸ்டேட்டஸ்கள்:



  1. இதயம் எழுதும் கவிதை நீ, எங்கும் நிறைந்த புதுமை நீ, பதியன் போட்ட பயிரும் நீ, பாய்ந்து வரும் நதியும் நீ, மதிய நேரத் தென்றல் நீ, மண்ணில் உலவும் தேவதை நீ, புதிய உலகின் பழமை நீ, பூத்து நிற்கும் தாய்மை நீ! அம்மா உனக்கு அன்னையர் தினம் வாழ்த்துக்கள்!

  2. தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

  3. அன்பின் துவக்கம் மற்றும் முடிவே தாய்மை! அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!

  4. இந்த உலகுக்கு நீங்கள் ஒரு நபராக இருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை, நீங்கள்தான் என் முழு உலகமும்! அன்பான அன்னையருக்கு வாழ்த்துக்கள்!

  5. கோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதை காட்டினாலும் உன் மீது அன்பு மட்டுமே செலுத்தும் ஒரே ஜீவன் அம்மா! அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

  6. அன்னையர் தினத்தில் மட்டும் அன்னையை கொண்டாடாமல் அன்றன்றைக்கும் கொண்டாட வேண்டும்! அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

  7. உழைப்பு சுரண்டலையும், தன் தியாகத்தையும் குடும்பத்திற்காக எளிமையாக கடந்து செல்பவள் தாய்! அன்னையர் தின வாழ்த்துக்கள்!

  8. அன்புள்ள அம்மா, நான் உங்களிடமிருந்து பெற்ற அன்பின் அளவை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

  9. முதல் துளி கண்ணிரைத் துடைத்து, என்னை அரவணைத்து, மறு துளி வராமல் தடுபவள் நீயே, தாயே! உனக்கு அன்னையர் தின நல்வாழ்த்துகள்!

  10. கனவு, ஆசை, இலட்சியம் ஆகியவற்றை கலைத்து தன் குடும்பத்திற்காக வாழும் அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!


பகிர்வதற்கு புகைப்படங்கள்: