மைக்ரேன் தலைவலி- பலர் எதிர்கொள்ளும் தீவிரப் பிரச்சினை. வெறும் தலைவலிதானே என்று பிறர் நினைக்கலாம். ஆனால் மைக்ரேனை உணர்ந்தவர்களால்தான் அதன் தீவிரத்தை அறிய முடியும். இந்த நிலையில் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி பிரச்சினையை உணவு முறை மூலமே சரிசெய்ய முடியும் என்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. 

Continues below advertisement

இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது,’’மைக்ரேன் அழுத்தம் சார்ந்த தலைவலியால் அடிக்கடி தொந்தரவுக்கு உள்ளாகுபவர்கள்  உங்களின் உறக்கத்தை சரி செய்யுங்கள்.

தினசரி சரியான நேரத்தில் தூங்கி  சரியான நேரத்தில் எழ வேண்டும்.

Continues below advertisement

உதாரணம் பத்து மணிக்கு உறங்கி, ஆறு மணிக்கு எழுதல் நலம்

அடுத்து தினசரி முக்கால் மணிநேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தத்தை அதிகரிக்கும் விஷயங்களில் இருந்து இயன்ற அளவு விலகி இருக்க வேண்டும்.

மன அமைதி தரும் விஷயங்கள் -

இசை/ யோகா/ தியானம்/ டாய்-ச்சி/ ஆன்மீகம்/ பொது நலக் காரியங்கள் / நண்பர்களுடன் நல்ல முறையில் பொழுது போக்குதல்

புகை மது உள்ளிட்டவற்றை ஒதுக்கி வைத்தல்

இவற்றுடன் கீழ்க்காணும் உணவு முறை அவசியம்.

மைக்ரேனின் தீவிரத்தைக் குறைக்க உதவக்கூடும் இதை கீடோஜெனிக் உணவு முறை என்று கூறுகிறோம். உணவின் மூலம் கீடோன்கள் உருவாகி மூளையும் கீடோன்கள் மூலம் பெரும்பகுதி இயங்கத் துவங்கும். க்ளூகோஸை நம்பி இருக்கும்போது ரத்தத்தில் அதன் ஏற்ற இறக்கம் . மூளைக்குச் செல்லும் க்ளூகோஸை பாதிக்கும்.

இனிப்புக்கு நோ சொல்லுங்க!

க்ளூகோஸ் குறைந்தாலும் சரி கூடினாலும் சரி மூளையில் மைக்ரேனுக்கான சமிக்ஞைகள் தூண்டப்படுகிறது. உணவில் இனிப்பு சுவை கொண்ட அனைத்தையும் உடனடியாக நிறுத்தவும்.

சீனி/ நாட்டு சர்க்கரை / வெல்லம்/ கருப்பட்டி / தேன் உள்ளிட்ட சேர்மானங்கள் இனிப்பான பழங்கள் உட்பட தவிர்க்கவும்.

சமைப்பதற்கு தேங்காய் எண்ணெய், நெய், வெண்ணெய் உபயோகிக்கவும்.

பேக்கரி ஸ்நாக்ஸ்/ வடை/ பஜ்ஜி முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும்

மைக்ரேனுக்கு முறையான மருத்துவத்தை நியூராலஜிஸ்ட்டை அணுகி எடுக்க வேண்டும்.

மைக்ரேன் மாடல் டயட் சார்ட்

காலை வெறும் வயிற்றில் ப்ளாக் காபி / டீ இனிப்பு சேர்க்காமல்

பத்து மணிக்கு காலை உணவு

80 கிராம் அவித்த நிலக்கடலை அல்லது

80 கிராம் ஊறவைத்த பாதாம் அல்லது மூன்று முட்டைகள்

ஸ்நாக்ஸ்

100 கிராம் வெள்ளரிக்காய்

மதிய உணவு

150 கிராம் காய்கறி

+ 100 கிராம் கீரை

+ இரண்டு முட்டைகள்

ஸ்நாக்ஸ்

உப்பிட்ட நெல்லிக்காய் சாறு

இரவு

250 கிராம்,

கோழி மாமிசம் - 4/7 ( வாரத்தில் நான்கு நாட்கள்)

ஆட்டிறைச்சி - 1/7

மீன் - 2/7

சைவம் மட்டும் உண்பவர்களுக்கு

 

200 கிராம் பனீர் ( வாரம் மூன்று நாட்கள்)

200 கிராம் மஷ்ரூம் ( வாரம் இரண்டு நாட்கள்)

200 கிராம் காலிஃபிளவர் ( வாரம் ஒரு நாள்)

உணவை நெய்யில்/ தேங்காய் எண்ணெயில் சமைக்கவும்.

இரவு உணவை எட்டு மணிக்குள் முடிக்கவும்.

தண்ணீர் தினசரி மூன்று லிட்டர் முதல் நான்கு லிட்டர் வரை பருகவும். இவை அனைத்தையும் செய்வதால் மைக்ரேன் தலைவலி கட்டுக்குள் வர அதிக வாய்ப்புள்ளது.

இது ஆய்வு ரீதியாகவும் அனுபவ ரீதியாகவும் கண்டு வரும் உண்மையாக இருக்கிறது. இதன் மூலம் ஏற்படும் உடல் எடை குறைப்பு  மைக்ரேனில் முன்னேற்றத்தை வழங்கக்கூடும். கீட்டோஜெனிக் உணவு முறை மைக்ரேனை கட்டுக்குள் வைக்கும் உணவு முறை’’ என்று மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.