2022-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி (01.03.2022) மகா சிவராத்திரி வருகிறது. மகா சிவராத்திரி என்றால் 'சிவபெருமானின் சிறந்த இரவு' என்று பொருள். இந்த நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து சிவனை வழிபடுவார்கள். மகா சிவராத்திரியை முன்னிட்டு டிசைன் செய்யப்பட்டுள்ள சில வாழ்த்துகளின் தொகுப்பை இங்கே காணலாம்!


வாழ்த்து - 1


உங்களது அனைத்து வேண்டுதல்களையும் ஈசன் கேட்டு பூர்த்தி செய்து ஆசீர்வதிக்க மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்



 


வாழ்த்து - 2


வளம், நலம், மகிழ்ச்சி சூழ்ந்து வாழ மஹா சிவராத்திரி வாழ்த்துகள்



 


வாழ்த்து - 3


இன்று காலை உங்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தைக் கொண்டு வரட்டும். முழு பக்தியுடன் நாள் கொண்டாடுங்கள். உங்களுக்கு மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்.


 



வாழ்த்து - 4


இனிய மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்! கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார். மேலும் நிறைய மகிழ்ச்சிகள் உங்களை தேடிவர வாழ்த்துக்கள். ஓம் நம சிவாய...!



வாழ்த்து - 5


சிவ பெருமான் உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார். மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்!



மகா சிவராத்திரி விரத முறைகள்:


சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம். விரதம் மேற்கொள்ளும்போது உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். சில கோவில்களில் தொடர்ந்து அன்னதானம் செய்து கொண்டே இருக்கிறார்கள். நம் உடல் உணவின்றி சிறிது வருந்தும்போது தான் எளிதாக வசப்படும்.


நாம் சொன்னபடி நம் மனது கேட்கும். அதற்காகத் தான் விரதமே. அவ்வாறு கேட்கும் மனதை இறைவனிடத்தில் செலுத்தி, அவனோடு சிந்தையில் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும். மறுநாள் காலை குளித்து பூஜைகள் செய்து, மீண்டும் சிவாலயங்கள் சென்று விரதத்தை முடித்துக் கொள்ளலாம்








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண