Maha Kumbh: கும்பமேளாவில் டீ விற்பனை; ஒரு நாளில் ரூ.5,000 லாபம் - வைரல் வீடியோ!
Maha Kumbh: மகா கும்பமேளாவில் டீ விற்பனை செய்பவரின் வீடியோ வைரலாகி வருகிறது.

மகா கும்பமேளா நிகழ்வில் டீ விற்பனை மூலம் ஒரு நாளைக்கு ரூ.5,000 லாபம் பெற்றுள்ளதாக சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ வைரலாகி வருகிறது.
மகா கும்பமேளா:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை , மகா கும்பமேளா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆன்மீக கொண்டாட்ட நிகழ்வில் உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். அரசியல் தலைவர்கள் முதல் பிரபலமானவர்கள் வரை புனித நீராடி உள்ளனர். ஜனவரி 13 ஆம் தேதி, பிரயாக்ராஜில் தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26 புதன்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும். வரலாற்று ரீதியாக, கும்பமேளா புனித நீரில் நீராடுவதுடன், பாவங்களைப் போக்குவதற்கும், மோட்சத்திற்கான பாதையில் இறங்குவதற்கும் முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் விபத்து தொடங்கி பல்வேறு செய்தியகள் கும்பமேளாவை பற்றி கிடைக்கின்றன. அதில், கும்பமேளாவில் பல் துலக்கும் குச்சிகளை ரூ.40,000 விற்பனை செய்தவர் பற்றிய செய்தி வெளியாகி வைரலானது. இப்போது கும்பமேளா நிகழ்வில் டீ விற்பனை மூலம் ஒரு நாளைக்கு ரூ.5,000 லாபம் பெறுவது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
கும்பமேளா நாட்டில் நடைபெற்று வரும் மிகப் பெரிய நிகழ்வாகும். இதில் ஒரு நாளில் ஏராளமானோர் பங்கேற்கினறனர். இதுவரை 40 கோடி பேர் புனித நீராடிவிட்டு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இங்கே வருபவர்களுக்கு கட்டணமில்லா குடிநீர் வசதி கிடைக்கிறது. இந்நிகழ்வில், பத்து ரூபாய்க்கு டீ விற்பனை செய்து லாபம் பெறும் நபர் பற்றி சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக டீ விற்பனை செய்பவரே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு நாள் டீ விற்பனை மூலம் ரூ.12,000 சம்பாதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.கும்பமேளா நிகழ்வில் காலை மற்றும் மாலை வேளையில் டீ விற்பனை பிஸியாக இருக்கும். ஒரு நாளில் ரூ.7000-க்கு டீ விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர். ‘ இதை நான் பார்ட் டைம் பிசினஸாக தொடங்கலாமே? என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இன்னொருவர், “உங்களின் கதை ஊக்கமளிப்பதாக இருக்கிறது. “ என்று குறிப்பிட்டுள்ளார்.