Human Body: மனித உடல் அதிக எடை கொண்ட உறுப்பு, ஆக்சிஜனை அதிகம் பயன்படுத்தும் உறுப்பு எது என்ற கேள்விக்கு பதில் தெரியுமா?
மனிதன் எனும் ஆச்சரியம்..!
சூரிய குடும்பத்தில் உயிர் வாழும் ஒரே கிரகமாக கருதப்படும் புவியில் பல ஆச்சரியங்கள் நிறைந்து இருந்தாலும், மனித தான் இன்னும் ஒரு ஆகச்சிறந்த ஆச்சரியமாக தொடர்கிறான். அவனை முழுமையாக உணர்வது என்பது படைத்தவனுக்கே அரிது தான். அதேநேரம், நாம் நமது உடலை பார்க்கும் போது ஏராளமான கேள்விகள் எழலாம். ஒவ்வொரு உறுப்பும் எப்படி தேவையை அறிந்து உடலில் இடம்பெற்றுள்ளது. உறுப்புகளுக்கு ஏற்ப மனித பழக்க வழக்கங்கள் உருவாகினவா? அல்லது தினசரி பழக்க வழக்கங்களுக்காகவே உறுப்புகள் உருவாக்கப்பட்டனவா என்ற பதில் இல்லாத பல கேள்விகள் இருக்கின்றன. இந்த சூழலில், மனித உடல் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மனித உடல் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்:
எலும்புகள்: மனித உடலில் வயது முதிர்ந்த நிலையில் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் குழந்தைகள் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளை கொண்டிருக்கின்றன. மனித உடலில் தொடை எலும்பு மிக நீளமான மற்றும் வலுவான எலும்பு ஆகும். அதே சமயம் நடுத்தர காதில் உள்ள ஸ்டேப்ஸ் எனப்படும் எலும்பு பகுதி சிறியது மற்றும் லேசானது ஆகும்.
தோல்: தோல் என்பது உடலின் மிகப்பெரிய உறுப்பு ஆகும். இது உடல் எடையில் 15 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளது.
ரத்த நாளங்கள்: மனித உடலில் 96,560 கிலோ மீட்டர் முதல் 1.60 லட்சம் கிலோ மீட்டர் நீளம் வரையிலான ரத்த நாளங்கள் உள்ளன. இது மூன்று முறைக்கு மேல் உலகைச் சுற்றி வருவதற்கு ஈடான தூரமாகும்.
மூளை: உடல் எடையில் 2% மட்டுமே இருந்தாலும், மூளை உடலின் ஆக்ஸிஜன் மற்றும் ரத்த விநியோகத்தில் 20% பயன்படுத்துகிறது.
பற்கள்: பற்கள் சுறாவின் பற்களைப் போல வலிமையானவை மற்றும் உடலின் கால்சியத்தில் 99% உள்ளன.
கண்கள் மற்றும் காதுகள்: கண்கள் மற்றும் காதுகள் வளர்ச்சியை நிறுத்தாது, ஏனெனில் அவை முக்கியமாக குருத்தெலும்பு செல்களால் ஆனவை, அவை வயதுக்கு ஏற்ப தொடர்ந்து வளர்கிறது.
நுரையீரல்: அல்வியோலி எனப்படும் 300 மில்லியன் பலூன் போன்ற அமைப்புகளைக் கொண்டிருப்பதால், நுரையீரல்கள் தண்ணீரில் மிதக்கும் ஒரே உறுப்பு ஆகும்.
உமிழ்நீர்: வாழ்நாளில், ஒரு மனிதன் 25,000 குவார்ட்ஸ் உமிழ்நீரை உற்பத்தி செய்கிறான், இது கிட்டத்தட்ட இரண்டு நீச்சல் குளங்களை நிரப்ப போதுமானது.
கைரேகைகள் மற்றும் நாக்கு ரேகைகள்: மனிதர்களுக்கு தனித்துவமான கைரேகைகள் மற்றும் நாக்கு ரேகைகள் உள்ளன.
தாடி: தாடி மனித உடலில் வேகமாக வளரும் முடிகள்
மூளையின் இடது மற்றும் வலது பக்கங்கள்: மூளையின் இடது பக்கம் உடலின் வலது பக்கத்தையும், மூளையின் வலது பக்க உடலின் இடது பக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.