இயல்பிலேயே இந்தியர்கள் தேநீர் பிரியர்கள் என்பதால் அதிகம் வீட்டில் தேநீர் காய்ச்சுவது ஒவ்வொரு இந்தியக் குடும்பங்களிலும் தவிர்க்கமுடியாதது. மேலும் நாளுக்கு நாள் பயன்படுத்திய தேயிலை இலைகளை தூக்கி எறிவதும் ஒருபக்கம் அதிகரித்தபடி உள்ளது.ஆனால் சமையலறையில் வேறு பல வகைகளில் உதவியாக இருக்கும் தேயிலை என்பதை நாம் எவருமே உணருவதில்லை. சமைப்பதில் இருந்து சுத்தம் செய்வது வரை, எஞ்சியிருக்கும் தேயிலை இலைகளை மீண்டும் அப்சைக்கிள் செய்யலாம் மற்றும் பல ஆச்சரியமான வழிகளில் பயன்படுத்தலாம். நீங்கள் தேநீர் தயாரிப்பதற்கு தேயிலை இலைகளைப் பயன்படுத்திய பிறகு அதனை மீண்டும் பயன்படுத்த சில அற்புதமான குறிப்புகள் இங்கே உள்ளன.
1. உங்கள் சாலட்டை சீசன் செய்ய: இது கேட்பதற்கு எவ்வளவு விசித்திரமாகத் தோன்றினாலும், தேயிலை இலைகள் உண்மையில் சாலட்களுக்கு சிறந்த சீசனிங்காக அமைகின்றன. ஈரமான தேயிலை இலைகளை நேரடியாக உங்கள் சாலட்டில் சேர்க்கலாம். ஆனால் அவை உபயோகிக்கப்பட்ட அதே நாளில் சாலட்டில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
2. தேயிலை ஊறுகாய்: பயன்படுத்திய தேயிலை இலைகள், எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து ஒரு மேசன் ஜாரில் வைக்கவும். ஒரு வாரம் வரை ஊறுகாயாகப் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் சாண்ட்விச்கள், சாலடுகள் மற்றும் பிற உணவுகளில் சேர்க்கலாம்.
3. சுத்தமான சமையலறை மேற்பரப்புகளுக்கு: பயன்படுத்தப்பட்ட தேயிலை இலைகளை வேலை செய்யும் இடங்கள் மற்றும் கட்டிங் போர்ட் ஆகியவற்றில் வைக்கவும். வழக்கம் போல் மெதுவாக தேய்த்து சுத்தம் செய்யவும். தேயிலை இலைகள் அழுக்கு, கிரீஸ் மற்றும் துர்நாற்றத்தை அகற்றும். உங்கள் சமையல் பாத்திரங்கள் மற்றும் கட்லரிகளில் இருந்து கறை மற்றும் துர்நாற்றத்தை அகற்றவும் இந்த இலைகளைப் பயன்படுத்தலாம்.
4. துர்நாற்றம் இல்லாத ஃப்ரிட்ஜுக்கு : உங்கள் குளிர்சாதனப்பெட்டியைத் திறந்தவுடன் அதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து உணவுப் பொருட்களும் துர்நாற்றம் வீசுகிறதா? தேநீர் இலைகள் பயன்படுத்துங்கள். தேயிலை இலைகள் துர்நாற்றத்தை உறிஞ்சுவதாக அறியப்படுகிறது. மீதமுள்ள தேயிலை இலைகளை உலர்த்தி ஒரு மஸ்லின் துணியில் பேக் செய்யவும். உணவு வாசனையை மறைக்க உங்கள் குளிர்சாதன பெட்டியில் அந்தப் பையை வைக்கவும். மேலும் மைக்ரோவேவ் மற்றும் ஓவனில் உள்ள துர்நாற்றத்தைப் போக்க இதைப் பயன்படுத்தலாம்.
5. குக்கீகள், கேக்குகள் மற்றும் மஃபின்கள் போன்ற உங்கள் வேகவைத்த உணவுகளில் தேநீர் இலைகள் கூடுதல் சுவை உடையதாக இருக்கும். உங்கள் பேக்கிங் கலவையில் சில பயன்படுத்திய தேயிலை இலைகளைச் சேர்த்து, நீங்கள் விரும்பும் தனித்துவமான மற்றும் வித்தியாசமான சுவையுடன் கேக் போன்ற்வற்றை உருவாக்கலாம். இதன் சுவை வித்தியாசமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.