காதலர் தின வாரத்தினை யொட்டி இன்று அதாவது காதலர் தினத்திற்கு முன்தினம் (பிப்ரவரி,13) கிஸ் டே உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இன்று தனது காதலுக்குரிய நபரைச் சந்தித்து அவருக்கு உள்ளிருந்து கொடுக்கும் முத்தத்திற்காக  இப்போது வரை காத்திருக்கும் காதலில் விழுந்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்காக தமிழ் சினிமாவில் இதுவரை வந்த பாடல்களில் முத்தத்தினை மையப்படுத்தி வந்த சிறந்த  10 பாடல்களை  இந்த தொகுப்பில் காணலாம். 


அதில், முதல் பாடலாக இருப்பது அனைவராலும் பெரிதும் கொண்டாடப்பட்ட பாடலான ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது பாடல் தான். இந்த பாடல் 2004ஆம் ஆண்டு வெளிவந்த செல்லமே திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. 

 

இரண்டாவது இடத்தில் இருக்கும் பாடல், கொண்டாட்ட நேரங்களில் இந்த பாடல் தவிர்க்க முடியாத பாடலாக மாறியிருக்கும் பாடல் என கூறலாம். 2005ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை பா. விஜய் எழுதியுள்ளார். இதில் உள்ள தொடக்க வரிகளான தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா என்ற  யுவன் சங்கர் ராஜா இசையில் தமிழ்நாட்டையை ஆடவைத்தது எனலாம். 

 

அதன் பின்னர் இந்த வரிசையில் உள்ள பாடல் என்றால் அது, 80ஸ் கிட்ஸ் கொண்டாடி தீர்த்த படத்தில் இடம்பெற்ற பாடல் தான். 1994ஆம் ஆண்டு வெளியான ஜெய்கிந்த் படத்தில் வித்யாசாகர் இசையில் வைரமுத்து வரிகளில் அன்றைய வானொலியில் அதிகம் ஒலித்த வரிகள் இதுதான்.  முத்தம் தர ஏத்த இடம் முகத்துல எந்த இடம் இப்போதே சொல்லடி பெண் பூவே எல்லாமே நல்ல இடம். 

 

இந்த வரிசையில் அடுத்து உள்ள பாடல் என்றால், 90ஸ் கிட்ஸை ஆட்டம் போடவைத்த பாடல் எனலாம், அது தூள் திரைப்படத்தில் வித்யாசாகர் இசையில் ,பா.விஜய் எழுதிய பாடல் தான். இத்துனுண்டு முத்தத்தில இஷ்டம் இருக்கா இல்ல இங்கிலிஷு முத்தத்தில கஷ்டம் இருக்கா இன்றுவரை அந்த பாடலுக்கான மவுசு குறையவில்லை எனலாம். 

 

அடுத்து உள்ள பாடல், தமிழ்நாட்டில் டேப் கேசட்டுகளில் பாடல்கள் விற்பனை செய்யப்பட்ட நாட்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த மன்மதராசா பாடல் இடம் பெற்ற திருடா திருடி படத்தின் முதல் பாடல் தான் அது. ஆஹா கூசுது முத்தம் முத்தம் ஆழகா இருக்குது முத்தம் முத்தம் என்ற பாடல் அனுராதா குரலில் தமிழ் நாடு முழுவதும் ஒலித்தது. 

 

இந்த வரிசையில் அடுத்து உள்ள பாடல், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி அதிரடி ஹிட் ஆன போக்கிரி படத்தில் இடம்பெற்ற நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ் பாடல் தான். இந்த பாடலில் விஜய் மற்றும் அசினுடன் இணைந்து தமிழ்நாடே ஆடியது எனலாம். 

 

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனின் நடிப்பில், காதலை ததும்ப ததும்ப வெளிப்படுத்திய பாடலில் இடம் பெற்ற வரிகளை ரசிக்காத காதலர்களே இருக்க மாட்டார்கள். இதழும் இதழும் இணையட்டுமே புதியதாய் வழிகள் இல்லை என்ற வரிகள் அனிருத்தின் இசையில் அனைவரையும் உருக வைத்த வரிகளில் ஒன்று. 

 

தமிழ் சினிமா நட்சத்திரங்களில் முத்தத்துக்கு பெயர் பெற்றவர் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் சொல்லலாம். அவரது வசூல் ராஜா திரைப்படத்தில் இடம் பெற்ற பத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு பாடலில் உள்ள கிஸ்சு என்றால் உதடுகள் பிரியும் தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும் வரிகளை கட் சாங் என்ற கலாச்சாரம் தமிழ்நாட்டில் இருந்த போது பெரும்பாலான மக்களிடம் வரவேற்பை பெற்ற வரிகள் எனலாம். 

 

அடுத்த பாடலும் கமல்ஹாசன் நடித்த எனக்குள் ஒருவன் படத்தில் இடம்பெற்ற முத்தம் போதாதே சத்தம் போடாதே இந்த பாடலில் கமல் நாயகிக்கு முத்தங்களை வாரி வாரி வழங்கியிருப்பார். 

 

இந்த வரிசையில் இறுதியாக உள்ள பாடலும் நடிகர் கமல், பாடகராக பாடிய பாடல் தான். உல்லாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா இந்த பாடல் கமல் மற்றும் ஸ்வர்ணலதா குரலில் வெளியாகி அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றது.