பலருக்கும் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் இருக்கும். நாய், பூனை, லவ் பேர்ட்ஸ், முயல், ஹாம்ஸ்டர் என பல வகையான உயிரினங்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் முறை அதிகரித்து வருதை காண முடிகிறது. செல்லப்பிராணிகள் சிலர் வீடுகளில், முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினராகவே மாறிவிடுவர். நான் கால்களுடன் குட்டி உயிரில் வீடு முழுக்க சுற்றித் திரிந்து சேட்டை செய்யும் அழகை பலரும் ரசிக்கும்படி இருக்கும். அதோடு, நாய்,பூனைகள் வளர்ப்பது, அவைகளுடன் விளையாடு மன அழுத்தத்தை குறைக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.




அப்படியிருக்க, பூனைகள் வளர்ப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விசயங்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம். பொதுவாக, பூனைகள் சாதுவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குழந்தைகள், வீட்டில் உள்ளவர்களுடன் விளையாடுவது அவற்றுக்கு மிகவும் பிடிக்கும். பூனைகள் அதிக நேரத்தை தூங்கியே கழிக்கும். ஆம். பகல் முழுவதும் தூங்கும் பூனை, இரவில் இரை தேடுவது, இணையுடன் அவுட்டிங் என சென்றுவிடும், ஆம்.பூனை வேட்டையாடி உண்பதே இயல்பது,. வீட்டில் வளர்க்கிறோம்; அவற்றிற்கு தேவையான உணவை தந்தாலும், வேட்டையாடுவது அதன் இயல்பு.


பூனைகள் பொதுவாகவே உணர்வுபூர்வமாக யாரையும் சார்ந்திருக்காது என்ற ஆய்வுகள் சொல்கின்றன. இருப்பினும், ஒவ்வொரு பூனையும் தனித்த இயல்புகளை கொண்டிருக்கும். பூனை தனக்குப் பிடித்தவர்கள் மீது வாஞ்சையோடு உரசிக்கொண்டே இருக்கும். வீடு முழுவதும் அதன் இடம் என்று நினைத்துக்கொண்டு உலா வரும்.  சில பூனைகளுக்கு தண்ணீர் என்றால் ப்ரியம். ஆனால், நாயைப்போல பூனைகளை அடிக்கடி குளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பூனைகள், தினமும் தங்களை நன்றாக சுத்தப்படுத்தி கொள்ளும். தேவையெனில், ஆறு மாதங்ளுக்கு ஒருமுறை பூனையை குளிக்க வைக்கலாம்.(அது ரொம்பவே கடினமான டாஸ்க்,)




பூனைக்கு பால், மாமிசம், மீன் உள்ளிட்டவை கொடுப்பதால் மட்டுமே அவைகளுக்கு தேவையான நீர்ச்சத்து முழுமையாக கிடைத்துவிடுமா என்று கேட்டால் இல்லை என்கின்றனர் கால்நடை மருத்துவர்கள். சில பூனைகள் இயல்பிலேயே தண்ணீர் குடிக்கும். ஆனால், சில பூனைகள் தேவை என்றாலும் கூட தண்ணீர் குடிக்காது. பூனைக்கு தண்ணீர் தேவை என்பதை எப்படி அறிந்துகொளவ்து,அவற்றை எப்படி தண்ணீர் குடிக்க பழக்குவது என்பது குறித்து மருத்துவர்கள் சொல்லும் டிப்ஸைக் காணலாம்.



  • பொதுவாகவே,மற்ற விலங்குகளைப்போல இல்லாமல், பூனைகள் மிகவும் குறைவாகவே தன் வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிக்கும் பண்பு கொண்டவை.

  • பூனைகளுக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் மூச்சிரைக்கும். இது ஒரு ஆபத்தான அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில், இது உடலில் முற்றிலும் நீர்ச்சத்து இல்லாததன் அறிகுறி. இந்தநிலை வரை விடக்கூடாது. இருப்பினும், மூச்சுத் திணறல் மற்ற காரணங்களையும் கொண்டிருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • பூனை எப்போதும்போல, சுறுசுறுப்பாக இல்லாமல் இருக்கும். அதன் முகம் மாறும். பசியின்மை இருக்கும்.

  • பூனை பிடித்தமான உணவுகளைக் கூட சாப்பிடாது. 

  • அவர்களால் இயல்பாக ஓடி, ஆட முடியாது. 

  • பூனைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்போது அவற்றின் ஈறு மற்றும் வாய் ஆரோக்கியத்தைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். 

  • நீண்ட நாட்களுக்கு பூனைகள் இயல்பாக இல்லை என தெரிந்தால் உடனே மருத்துரை அணுகவும்.