ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் அவசியம் என்பதில் சந்தேகமில்லை. போதுமான தண்ணீர் குடிப்பது சிறுநீர்ப்பையில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகிறது. உடல் அதன் உயிரணுக்களுக்குள் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும், செரிமானத்திற்கு உதவவும் இதைப் பயன்படுத்துகிறது. மேலும், இது உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது, உறுப்புகள் மற்றும் திசுக்களைப் பாதுகாக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. மூட்டுகளை மெருகேற்றவும், ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமான உடலை பராமரிக்கவும் நாள் முழுவதும் தொடர்ந்து தண்ணீர் குடிப்பது முக்கியம்.

சமீபத்தில், அலியா பட் மற்றும் கரீனா கபூரின் யோகா பயிற்சியாளரான அன்ஷுகா பர்வானி, சரியான வழியில் தண்ணீர் குடிப்பதற்கான உதவிக்குறிப்புகள் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “தண்ணீர் குடிக்க சரியான வழி இருக்கிறதா. ஆம், இருக்கிறது! உங்கள் உடலின் நீரின் அளவை எப்போதும் செக்கில் வைத்திருப்பது மிக முக்கியமானது.

ஆனால், அதற்குச் சரியான வழி இருக்கிறது." உதாரணத்துக்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது மூட்டுவலியைத் தூண்டும் மற்றும் உடல் அமைப்பின் வழியாக நீர் பயணிக்கும் வேகம் அதிகரிக்கும் போது நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.

தண்ணீர் குடிப்பதற்கான சரியான வழி முதலில் நேராக அமர்ந்தபடி உட்கொள்வது என்று அவர் கூறுகிறார். இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வீக்கத்தை சமாளிக்கிறது. மேலும் செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார், "தாமிரத்தின் குளிர்ச்சியான பண்புகள் உடலை நச்சு நீக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் இரத்த சோகையைக் குறைக்கவும் உதவுகிறது." என்கிறார் அவர்.