ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகள் 2030 நிகழ்ச்சி நிரலின் முக்கிய அங்கமாக அறிவியலில் பாலின சமத்துவத்தை முன்வைக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெண்கள் ஆற்றிவரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பிப்ரவரி 11 ஆம் தேதியை அறிவியலில் பெண்களுக்கான சர்வதேச தினமாக கொண்டாடுகிறது. 


அறிவியலில் பெண்களுக்கான சர்வதேச தினம்


அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறையில் (STEM) பல்வேறு திறன்களில் பெண்கள் உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர் மற்றும் வெற்றிகரமான தலைமைத்துவத்தைக் காட்டியுள்ளனர். இருப்பினும், உலகளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்று வரும்போது குறிப்பிடத்தக்க பாலின ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அறிவியல் துறையில் பெண்களை ஈடுபடுத்த பல முயற்சிகள் நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும் இந்தத் துறையில் பெண்களின் பங்கேற்பில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகள் 2030 நிகழ்ச்சி நிரலின் ஒரு முக்கிய அங்கமாக அறிவியலில் பாலின சமத்துவத்தையும் வழங்குகிறது. 8வது சர்வதேச பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அறிவியல் சபையில் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. 



வரலாறு


பாலின சமத்துவத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கணிதப் படிப்புகளில் பெண்கள் ஈடுபடுவதற்கான அணுகலை வழங்குவதற்கும், ஐக்கிய நாடுகள் சபை பிப்ரவரி 11 ஆம் தேதியை 2015 ஆம் ஆண்டில் அறிவியலில் பெண்களுக்கான சர்வதேச தினமாக அறிவித்தது. உயர்கல்வியில் தங்கள் பங்களிப்பை உயர்த்துவதில் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இந்தத் துறைகளில் பெண்கள் இன்னும் குறைவாகவே உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்: IND vs AUS 1st Test: மிரட்டிய ரோகித்.. அசத்திய ஜடேஜா, அக்‌ஷர்..! 300 ரன்களை கடந்த இந்தியா- ஆஸி.க்கு நெருக்கடி?


முக்கியத்துவம்


அறிவியலில் பெண்கள் ஏற்கனவே ஏற்படுத்திய தாக்கத்தை அடையாளம் காணவும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறையில் வாழ்க்கைப் பாதைகளைத் தேர்வுசெய்ய இளம் பெண்களை ஊக்குவிக்கவும் இந்த நாள் ஊக்கமளிக்கிறது. இது அவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை முயற்சிகளில் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் பாடங்களில் ஆர்வமுள்ள பெண்களுக்கு ஆதரவை வழங்குகிறது.



இவ்வருட கருப்பொருள்


அறிவியலில் பெண்களுக்கான 8வது சர்வதேச தினத்தின் கருப்பொருள் “புதுமை செய், வெளிக்கொணர், உயர்த்து, முன்னோடியாக இரு (Innovate. Demonstrate. Elevate. Advance - IDEA): நிலையான மற்றும் சமமான வளர்ச்சிக்காக சமூகங்களை முன்னோக்கி கொண்டு வருதல்", ஆகும். அறிவியலில் பெண்களின் பங்கை நிலையான வளர்ச்சி இலக்குகள் எவ்வாறு இணைக்கின்றன என்பதில் இந்த ஆண்டின் அறிவியலில் பெண்களுக்கான சர்வதேச தினத்தின் கவனம் இருக்கும்.


குவோட்ஸ்


"அறிவியல் பெரிய அழகு என்று நினைப்பவர்களில் நானும் ஒருவர்." - மேரி கியூரி


"நீங்கள் செய்வது எல்லாமே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது, மேலும் நீங்கள் எந்த வகையான வித்தியாசத்தை உருவாக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்." - ஜேன் குடால், ப்ரிமாட்டாலஜிஸ்ட் மற்றும் மானுடவியலாளர்


“அறிவியலில் நமக்கு கற்பனை தேவை. இங்கு எல்லாமே கணிதமும் அல்ல, எல்லாமே தர்க்கமும் அல்ல, அது ஓரளவு அழகாகவும் கவிதையாகவும் இருக்கிறது." - மரியா மிட்செல், வானியலாளர்


“அறிவியல், என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கைக்கு விளக்கத்தை அளிக்கிறது. இது உண்மை, அனுபவம் மற்றும் பரிசோதனையை அடிப்படையாகக் கொண்டது." - ரோசாலிண்ட் பிராங்க்ளின், வேதியியலாளர் மற்றும் எக்ஸ்ரே படிகவியலாளர்