சமைப்பதற்கு மட்டுமில்லாமல் வலிக்கு மசாஜ் செய்ய, மொபைல்ஃபோன் பாதுகாப்பு, பழங்களைப் பழுக்க வைப்பது போன்ற பலவற்றிற்கு அரிசி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
உணவு இல்லாமல் யாருமே உயிர் வாழமுடியாது. அந்தளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் இன்றிமையாததாகிவிட்டது உணவுகள். இன்றைக்கு மக்களின் உடல்நலத்தைப்பாதுகாக்கும் விதமாக மாப்பிள்ளை சம்பா, கவுனி, சீரக சம்பா, பொன்னி, ஐஆர்20 போன்ற பல அரிசி வகைகள் உள்ளன. இதனை நாம் நம்முடைய உணவிற்காக மட்டுமில்லாது, பல்வேறு பயன்பாட்டிற்கும் நாம் உபயோகப்படுத்திவருகிறோம். இந்நிலையில் இதுவரை இந்த விஷயங்கள் உங்களுக்க தெரியவில்லை என்றால், அரிசியில் நிகழும் சில சுவாரஸ்மான விஷயங்கள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
பச்சைக்காய்கறிகள் மற்றும் பழுங்காத பழுங்களை அரிசியில் வைக்கும் போது 24 – 48 மணி நேரத்திற்கும் அவை பழுத்து சமைப்பதற்கும், பழங்களை சாப்பிடவும் அரிசி உதவியாக உள்ளது.
ஒரு கிண்ணத்தில் அரிசியை எடுத்து ஃபிரிட்ஜில் அல்லது உங்கள் சமையலறை அலமாரிகளில் வைக்க வேண்டும். இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் அங்கு துர்நாற்றத்தை உறிஞ்சிவிட உதவியாக உள்ளது.
நீங்கள் பழுப்பு அரிசி சமைக்க அதிக நேரம் எடுக்கும். எனவே இந்த செயல்முறையை விரைவுபடுத்த, சமைப்பதற்கு முன் அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
உலர் அரிசி, குறிப்பாக பழுப்பு மற்றும் காட்டு வகைகளை, சமைப்பதற்கு முன் சிறிது எண்ணெயில் வறுத்தெடுப்பது அதன் சுவையை அதிகரிக்க உதவுகிறது.
மசாஜ் செய்ய உதவும்: கொஞ்சம் அரிசியை மிக்ஸியில் எடுத்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு துணியில் போட்டு லேசாக சூடாக்கி வலி ஏற்படும் இடத்தில் ஒத்தனம்( மசாஜ்) வைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வலிக்கு கொஞ்சம் இதமாகவும், நிவாரணமாகவும் இருக்கும்.
மைக்ரோவேவில் அரிசியை மீண்டும் சமமாக சூடாக்க, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, கிண்ணத்தை ஒரு மஸ்லின் துணியால் மூடி, பின்னர் 1-2 நிமிடங்களுக்கு மைக்ரோவேவ் செய்யவும்.
டப்பாவில் சிறிதளவு அரிசியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுள் ஸ்பானர், ஸ்குரு டிரைவர் போன்ற கருவிகளை வைத்துவந்தால் அவை துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
கண்ணாடிகளை அரிசி தண்ணீரில் கழுவும் போது பளபளமாக இருக்கும்.
அரிசி தண்ணீரைப்பயன்படுத்தி துணிகளை அயர்ன் செய்யும் போது எவ்வித சுருக்கமும் இல்லாமல் செய்யலாம்.
மொபைல் சரிசெய்ய பயன்படும்: உங்கள் மொபைலில் தவறுதலாக தண்ணீர் கொட்டி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாக உங்களது பேட்டரியை அகற்றி, உலர்த்தி துடைத்து, அரிசி கொள்கலனில் 1-2 மணி நேரம் விடவும். பெரும்பாலும் உங்கள் மொபைல் மீட்டமைக்கப்படும்.
இதுவரை மேற்கண்ட சில சுவாரஸ்சியமான விஷயங்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றால், கொஞ்சம் ஃடிரை பண்ணிப்பாருங்கள்..