மழை காலம் தொடங்கியவுடன் கூடவே இருமல், காய்ச்சல் சளி பிரச்சனைகளும் வந்து சேரும். இதற்கு பெரும்பாலும் தீர்வாக சிரப் பரிந்துரைக்கப்படும். ஆனால், தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் மருந்துவர்களுக்கு ’pholcodine' எனற மருந்து பொருள் கொண்டு தயாரிக்கப்பட்ட சிரப் வகைகளை இருமல் பிரச்ச்னை இருப்பவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டுடாம் என்று அறிவுறுத்தியுள்ளது. சளி, இருமல் என்றால் சிரப் கொடுப்பதுதான் பெரும்பான்மையாக உள்ளது. இதில் பயன்படுத்தப்படும் ’pholcodine' என்பது பலருக்கும் அலர்ச்சி ஏற்படுத்தக் கூடியது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக மருத்துவர் சீத்தல் ராடியா பரிந்துரைகளையும் அவர் சொல்லும் இயற்கை மருத்துவ முறைகளையும் காணலாம்.


உடலில் உள்ள ரத்தக் கசிவை நீக்கும் Decongestants என்று அழைக்கப்படும் phenylephrine, pseudoephedrine அல்லது இந்த இரு மருந்துகளின் கூட்டு ஆகியவை அனைத்து மருந்து கடைகளிலும் விற்கப்படும் இருமல் மருந்துகள். இவற்றை 6 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு மருத்துவர் ஆலோசனை இல்லாமல் வழங்கக் கூடாது. மேலும், 2 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளை அளிக்கும் முன், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. 


இருமல் பிரச்சனை இருப்பவர்கள் உடனே மருத்து மார்த்திரைகள் சாப்பிட வேண்டும் என்றில்லை. அதன் தீவிரம் அறிந்து அதற்கேற்றவாறு மருந்து உட்கிகொள்ளலாம். இயற்கை மருத்துவத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தயாரிக்கலாம். 




தேன்


பல நூற்றாண்டுகளாக இயற்கை மருத்துவத்தில் இருமலுக்கு தீர்வாக தேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  தொண்டை எரிச்சல், இருமல் போன்ற்வற்றை குணப்படுத்தும் பண்பு தேனில் உள்ளது. ஹெர்பல் டீ அல்லது சுடு தண்ணீரில் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது. ஆன்டி- பாக்ட்ரீயல் பண்புகள் தேனில் உள்ளது. 


இஞ்சி


இஞ்சி இயற்கையிலேயே ஆன்டி - இன்ஃப்ளமேட்ரி குணம் நிறைந்துள்ளது. இருமல் பிரச்சனை தீர, சுவாச பாதையில் உள்ள பிரச்சனைகள் தீர இஞ்சி மிகவும் உகந்தது. இஞ்சி டீ, அல்லது சூடான பாலில் இஞ்சி மிளகு சேர்த்து அருந்தலாம். 


நீராவி பிடிப்பது


தலையில் நீர் கோர்த்தல் என்று சொல்லக்கூடிய பிரச்சனைகள், இருமல், சளி ஆகியற்றிற்கு இது நல்ல தீர்வாகும். இதில் மஞ்சள், வேப்பிலை உள்ளிட்ட மூலிகைகளையும் சேர்ப்பது நல்லது. 


உப்பு 


லேசான் சுடு தண்ணீரில் கல் உப்பு சேர்ந்த்து வாய் கொப்பளிப்பது இருமல், சளி உள்ள நேரங்களில் நோய் பரவுவது அதிகரிக்காமல் இருக்கும். 




எலுமிச்சை 


எலுமிச்சையில் வைட்டமின் சி இருப்பது அனைவரும் அறிந்ததே. வெந்நீரில் எலுமிச்சையில் சாறு சேர்ந்த்து,அதனுடன் தேன் உடன் அருகினால் தொண்டை எரிச்சல், இருமல் குறைய வாய்ப்புள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  


மஞ்சள் 


பாலில் மஞ்சள் சேர்த்து சாப்பிடுவது  நல்லது. இதில் ஆன்டி- இன்ஃபள்மேட்ரி பண்புகள் உள்ளன. தூங்க செல்வதற்கு முன்பு பாலில் மஞ்சள் சேர்த்து அருந்தினால் தீர்வுக்கு வழிவகுக்கும். அதோடு, உடல் நலம் சரியில்லாததால் ஏற்படும் தூக்கப் பிரச்சனைகள் குறையலாம். 


இருமல் உள்ளிட்ட எந்த உடல் பிரச்சனைகள் என்றாலும் இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.


பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.


லைஃப்ஸ்டைல் சார்ந்த, உடல்நலம் சார்ந்த செய்திகளில் இதை கடைசியாக சேர்க்கவும். உணவு ரெசிப்பிகளுக்கு இது அவசியமில்லை.