மனிதனுக்கு போதிய தூக்கம் நிலைத் தொடர்ந்தால் மனநலபாதிப்பு, நீரழிவு, எடை அதிகரிப்பு மற்றும் இதய நோய் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். எனவே தூக்கமின்மையை (இன்சோம்னியா )அசால்டாக விட்டுவிடாமல் ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும்.


தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் அமைதியைத் தரக்கூடிய சிறந்த ஆசனம் என்றே கூறலாம். நாள் முழுவதும் ஓடாய் தேய்ந்து உழைக்கும் மக்கள் அதற்கேற்றால் ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவு மக்களை சரியான நேரத்தில் தூங்குவதற்கு அனுமதிப்பதில்லை. ஆம் நாள் முழுவதும் லேப்டாப் முன்பு அமர்ந்து பணிபுரிவது, மொபைல்களை அதிக நேரம் பயன்படுத்துவது என வாழ்க்கை முறையே மாறிவிட்டது. பொதுவாக குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச்செய்யும் பழக்கமின்மை, மது மற்றும் காபி அல்லது பிற பானங்களை பருகுவதால் உடலில் தூக்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் வரவழைக்கும் இயல்பான உணர்விற்கு இடைஞ்சலாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.





இதோடு வயதிற்கு ஏற்றாற்போல் ஒவ்வொருவரும் தூக்கத்தை கடைப்பிடிக்கவும் வேண்டும் எனவும் கூறப்படுகிறது. பிறந்த குழந்தைகள் 14 முதல் 17 மணி வரை தூங்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் 10 லிருந்து 13 மணி நேரம் வரை தூங்க வேண்டும். 6 – 13 வயது குழந்தைகள் 9 மணி நேரத்திலிருந்து 11 மணி நேரம் வரை தூங்க வேண்டும். 18 – 64 வரை தினமும் 7 லிருந்து 9 மணி நேரம் தூங்கலாம். ஆனால்  6 மணி நேரத்திற்கு குறைவாகவோ அல்லது 11 மணி நேரத்திற்கு மேலாக தூங்கக் கூடாது. இதுப்போன்ற நேரத்தை சரியாக நீங்கள் மேற்கொள்ளாமல் குறைந்த நேரம் தூங்கினால் அது தான்“ தூக்கமின்மை“ எனப்படுகிறது. இதனை நீங்கள் சரியாக மேற்கொள்ளாவிடில் மனநல பாதிப்பு, நீரழிவு, எடை அதிகரிப்பு மற்றும் இதய நோய் பாதிப்பு ஏற்படும் என ஆய்வுகள் கூறப்படுகிறது.  எனவே உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவதற்கு மேற்கொள்ள வேண்டிய மற்றும் தூக்கமின்மைக்கான சில வழிமுறைகள் இதோ உங்களுக்கு..


காபின் பயன்பாடைத் தவிர்த்தல்:


காஃபின் உங்களது தூக்க சுழற்சியில் சீர்குலைக்கும் விளைவைக் கொண்டிருக்கிறது. காஃபினை நீங்கள் பயன்படுத்தும் போது உங்களது மொத்த தூக்க நேரத்தையும் குறைக்கிறது. எனவே நீங்கள் தூங்குவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பா காஃபின் கலந்த பானங்களை உட்கொள்ள வேண்டாம் என ஆய்வுகள் கூறுகிறது.


கேஜெட் பயன்பாடுகளைக்குறைத்தல்:


இன்றைக்கு அனைத்து மக்களும் மொபைல், லேப்டாப் போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால் கண்கள் பாதிப்பை ஏற்படுத்தி நமக்கு தூக்கம் வராமல் தடுக்கிறது. எனவே தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக மேற்க்கூறிய தொழில்நுட்ப சாதனங்கள் பயன்பாடுகளைக்குறைத்துக்கொள்ளவும்.


தியானம் மேற்கொள்ளுதல்:


தியானம செய்தல் உங்களது உடம்பிற்கு மற்றும் மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும் சிறந்த கருவியாக உள்ளது. எனவே உங்களது உடலை அமைதிப்படுத்த தூக்கம் முக்கியமானது. எனவே தூங்குவதற்கு முன்னதாக தியானம் செய்தால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.


மேலும் ஒருவரின் மன அழுத்தம் தூக்கமின்மை பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே உங்களது மனதை அமைதிப்படுத்துவற்கும், மனதை ஒரு நிலைப்படுத்த வாசிப்புதிறன் அவசியம் என்கின்றனர். இது மன அழுத்தத்தைக்குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல் உங்களது கவலையைக்குறைத்து வேறொரு உலகத்திற்கு உங்களை இட்டுச்செல்லும்.


மேற்கண்ட வழிமுறைகளை மேற்கொண்ட பின்பும் உங்களுக்கு தூக்கம் சரியாகவரவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை நீங்கள் அணுக வேண்டும் மேலும் மருத்துவர்களின் பரிந்துரையின் படி மருந்துகளை நீங்கள் உபயோகிக்கலாம்.