கண், தோல், நுரையீரல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கக்கூடிய பீட்டா கரோட்டின் நிறைந்த காய்கறி சூப்பினை நாம் எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.


உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக கொரொனா தொற்றின் தாக்கம் மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளது. இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க வேண்டும் என்ற வார்த்தையினை அடிக்கடி நம் காதுகள் கேட்டிருக்கும். குறிப்பாக இந்த கொரோனா காலக்கட்டத்தில் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் நம்மை காத்துக்கொள்வதற்கு முயன்று வருகிறோம். இந்நேரத்தில், நாம் தினமும் பயன்படுத்தக்கூடிய காய்கறிகளை வைத்து பீட்டா கரோட்டின் சத்து நிறைந்த காய்கறி சூப்பினை வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கலாம். இது நிச்சயம் நம் உடல் ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகிறது. இதோடு இந்த குளிர்காலத்தில் இது போன்ற சூப்களை வீட்டில் செய்து பருகும் போது சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படவாய்ப்பில்லை.





பீட்டா கரோட்டின் நிறைந்த காய்கறி சூப்பினை எப்படி  செய்வது என்பதை நாமும் அறிந்துக்கொள்வோம்.  முதலில் இந்த காய்கறி செய்வதற்கு தேவையான பொருள்களைப்பார்ப்போம்.


பொடியாக நறுக்கிய 3 தக்காளி, தோல் உறிக்கப்பட்டு சிறிது நறுக்கிய 2 பீட்ரூட்கள் மற்றும் 1 கேரட் மற்றும் 1 வெங்காயத்தினை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு கப் தண்ணீரினை ஊற்றி குக்கர் அல்லது பாத்திரத்தில் வைத்து வேக வைத்துக்கொள்ள வேண்டும். குக்கர் விசில் வந்தவுடன், பிரசர் முழுமையாக வெளியேறும் வரை காத்திருக்க வேண்டும்.


குக்கர் அல்லது வேக வைத்த காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


பின்னர், வானலில் வேக வைத்த காய்கறிகள் மற்றும் அரை தேக்கரண்டி சீரகம்,  1 தேக்கரண்டி கரம் மசாலா மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்றாக கொதிக்கும் வரை சமைக்க வேண்டும். நன்றாக கெட்டியாகும் வரை வானலில் வைத்து சூடாக்க வேண்டும்.


தற்பொழுது சூடான மற்றும் சுவையான அதிக பீட்டா கரோட்டின் நிறைந்த வெஜ் சூப் ரெடியாகிவிட்டது.


இதனை எளிமையாக வீட்டில்  செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் மற்றும் குளிர்காலத்தில் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க ஒரு நல்ல வழியாக உள்ளது.





 உடலில் அனைத்து நிலைகளிலும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்தும் திறன் இதில் அதிகளவில் உள்ளது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பீட்டா-கரோட்டின் என்பது ஒரு கலவை எனவும்,  இது பல உணவிலும் இயல்பானதாக இருக்கிறது மற்றும் உணவுப் பழக்கவழக்க வடிவத்தில் கிடைக்கின்றது. எனவே பீட்டா-கரோட்டின் உட்கொள்ளும் உங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்கு எதிராக பாதுகாக்கலாம் என்றும் கூறப்படுகிறது.